கேழ்வரகு லட்டு(Raagi Laddu)

            கேழ்வரகு லட்டு மிகவும் சத்தான அதே சமயம் சுலபமாக செய்யக் கூடிய நம் பாரம்பரிய உணவு..இதை எப்படி செய்வோம் என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
 கேழ்வரகு மாவு : 2 கப்
 வெல்லம்             : 1 கப் (தட்டியது)
 ஏலக்காய்            : 6 (பொடித்தது)
 முந்திரி                : சிறிதளவு
 நெய்                     : 8 தேக்கரண்டி

செய்முறை : 
              முதலில் வாணலில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு எடுத்து வைத்துள்ள கேழ்வரகு மாவைக் கொட்டி மிதமான சூட்டில் நன்கு மணம் வரும் வரை ஒரு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.பிறகு முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
            கேழ்வரகு மாவு சூடு ஆறியதும் அதனுடன் தட்டி வைத்தள்ள வெல்லம்,ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
            பிறகு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொண்டு ..மீதமுள்ள நெய்யை மிதமான சூட்டில் எடுத்துக் கொண்டு மாவில் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் ..இப்போது சுவையான ராகி லட்டு தயார்..

Comments

Post a Comment