குதிரைவாலி வெஜ் கிச்சடி (Millet Veg Kichadi)

தேவையான பொருட்கள் :

 குதிரைவாலி : 200 கிராம்
 பீன்ஸ் : 100 கிராம் (சிறிதாக நறுக்கியது)
 கேரட் : 100 கிராம் (சிறிதாக நறுக்கியது)
 பட்டாணி :60 கிராம்
 பெரிய வெங்காயம் :2 (சிறிதாக நறுக்கியது)
 தக்காளி :2 (சிறிதாக நறுக்கியது)
தேங்காய் : சிறிதளவு

தாளிப்பதற்கு :

எண்ணெய் :2 தேக்கரண்டி
கடுகு: சிறிதளவு
உளுத்தம் பருப்பு : 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு : 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 2
இஞ்சி : சிறிதளவு (துருவியது)
பெருங்காயம் : சிறிதளவு
மஞ்சள் தூள் : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : சிறிதளவு

செய்முறை 


   # முதலில்  குதிரைவாலியை நன்கு மண் போக கலைந்து விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து பின் நீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

   # ஒரு பங்கு குதிரைவாலிக்கு இரண்டே கால் பங்கு தண்ணீர் கொண்டு வேக வைக்க வேண்டும். அதாவது 200 கிராம் குதிரை வாலிக்கு 450 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

   #  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்க வேண்டும்.

     #  பிறகு சிறிதளவு பெருங்காயம்,வெங்காயம் இட்டு வதங்கியதும் அதன்பின் தக்காளியை குக்கரில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

   #  பின் வெட்டி வைத்துள்ள பீன்ஸ்,கேரட், பட்டாணி, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 2 நிமிடத்திற்கு வதக்கவும்.

    #  எடுத்து வைத்துள்ள தண்ணீரை குக்கரில் ஊற்றி உப்பின் அளவை சரிபார்த்துவிட்டு நீரானது கொதிக்கும் வரை காத்திருக்கவும்.நீர் கொதி வந்ததும் குதிரைவாலியை போட்டு குக்கரை மூடிவிட்டு அனலை குறைந்த அளவில் பத்து நிமிடத்திற்கு வைக்கவும்.



      # குக்கர் ப்ரஷர்  நீங்கியதும் குதிரைவாலியை லேசாக கிளறிவிட்டு அதனுடன் எடுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும்.இப்போது அருமையான குதிரைவாலி வெஜ் கிச்சடி தயார்.
     

Comments