வரகு முறுக்கு (Millet Rice Murruku)


தேவையான பொருட்கள் :
வரகு : 100 கிராம்
உளுந்த மாவு : 6 தேக்கரண்டி
கடலை மாவு : 9 தேக்கரண்டி
பொட்டுக்கடலை மாவு:3தேக்கரண்டி
சீரகம் : 1/4 தேக்கரண்டி
எள் : 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் :2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
செய்முறை :
   ● வரகு மற்றும் உளுந்தை நன்கு வாசம் வரும் வரை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும் .
    ● வறுத்தவற்றை சூடு தனிந்ததும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும் .
    ● ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவு,உளுந்து மாவு,பொட்டுக் கடலை மாவு,சீரகம்,எள்,வெண்ணெய்,உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
     ●  இந்த மாவு அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து கொண்டு,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
       
          ● பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்காக பிழிந்து விடவும்.

      ● இருபுறமும் சத்தம் அடங்கும் வரை பொறியவிட்டு எடுத்தால் சத்தான வரகு முறுக்கு தயார்..




Comments