தினை அரிசி அடை (Thinai Rice Adai)

தேவையான பொருட்கள் :

தினை அரிசி        : 1 கப்
துவரம் பருப்பு      : 1/4 கப்
பாசிப் பருப்பு        : 1/4 கப்
தனியா                    : 1 தேக்கரண்டி 
காய்ந்த மிளகாய் : 4
பூண்டு                      : 5 பல் 

தாளிப்பதற்கு :

எண்ணெய்             : 2 தேக்கரண்டி
கடுகு                         : 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு   : 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு        : 1/4 தேக்கரண்டி
வெங்காயம்            : 1 பெரியது
பெருங்காயம்         : சிறிதளவு
கறிவேப்பிலை       : சிறிதளவு

செய்முறை :

    ● மேற்சொன்ன தினை அரிசி,பாசிப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு மூன்றையும் 3 மணி நேரம் ஊற வைத்து,பின் அதனுடன் தனியா,காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
 
    ●  ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம்,கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.

   ●  தாளித்தவை சிறிது ஆறியதும், அவற்றை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு சிறிது சிறிதாக அடையாக தோசைக் கல்லில் இடவும்.

 
     ●  அடை சிறிது சிறிதாக இருந்தால் மட்டுமே மிகவும் சுவையாக இருக்கும்.

Comments

Post a Comment