வேர்க்கடலை உருண்டை(Groundnut Laddu)

        வேர்க்கடலையில் அதிகப்படியான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.எந்த வயதினரும் சாப்பிடக்கூடிய எளிய உணவு..இதனை தினமும் குழந்தைகளுக்கு ஒரு உருண்டை கொடுத்து வர அறிவு வளர்ச்சி அதிகமாகும்.

தேவையான பொருட்கள்  :

வறுத்த வேர்க்கடலை: 1/2 கிலோ
வெல்லம் : 1/2 கிலோ (நன்கு தட்டியது)
நெய் : 2 தேக்கரண்டி

செய்முறை:

  ○ வறுத்த வேர்க்கடலையின் தோலை நன்கு புடைத்து நீக்கிக் கொள்ளவும்.

  ○ ஒர் மிக்ஸியில் வேர்க்கடலையை கொட்டி அரைத்துக் கொண்டு பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து ஒர் முறை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  ○ அரைத்த மாவை எடுத்து நமக்கு தேவையான அளவில் நன்கு அழுத்தி உருண்டை பிடித்துக் கொள்ளவும்.


  ○  உருண்டை பிடிக்க வரவில்லை எனில் எடுத்து வைத்துள்ள நெய்யை உருக்கி அந்த மாவில் நன்கு கலந்து கொண்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு இப்போது உருண்டை பிடிக்கவும்.

     குறிப்பு : வேர்க்கடலை நல்ல எண்ணெய் தன்மை உடையதாகவும் வெல்லம் பாகுத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் வேர்க்கடலை உருண்டை ருசியாக இருக்கும்.

Comments