சிவப்பு கவுனி அரிசி இட்லி (Red Kavuni Rice Idly)

சிவப்பு கவுனி அரிசி செய்யத் தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி: 1 கப்
இட்லி அரிசி : 1 கப்
உளுத்தம் பருப்பு:1/2 கப்

செய்முறை :

    ● கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசியை 3 முதல் 4 மணி நேரமும் உளுந்தை 2 மணி நேரமும் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ● இட்லிக்கு மாவு அரைப்பது போல உளுந்தை முதலில் பொங்க அரைத்துக் கொண்டு பின் இட்லி மற்றும் கவுனி அரிசியை அரைத்துக் கொள்வோம்.

    ● பிறகு அதற்கு தேவையான உப்பை போட்டு 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவானது நன்கு புளித்து இருக்கும்.

    ● சூடான இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.


    ● இப்போது மிகவும் சத்தான மிருதுவான சிகப்பு கவுனி இட்லி தயார்.

Comments

  1. கருப்பு உளுந்து(தோலுடன் இருக்கும்) பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும்.

    ReplyDelete

Post a Comment