சைனீஸ் சிக்கன் நூடுல்ஸ் (Chinese Chicken Noodles)

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் : 150 கிராம்

சிக்கன்    : 100கிராம்(எலும்பில்லாதது,                                  சிறிது சிறிதாக வெட்டிக்                                          கொள்ளவும்)

குடை மிளகாய் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது)

கேரட் : சிறிதளவு (நீளவாக்கில்                                          வெட்டியது)

கோஸ் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது )

வெங்காயம் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது )

இஞ்சி : சிறிதளவு

பூண்டு : சிறிதளவு

பச்சை மிளகாய் : 1 அல்லது 2 (சிறிதாக                                         வெட்டிக் கொள்ளவும்)

தனி மிளகாய் தூள் : 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் : 1/2 தேக்கரண்டி

சோயா சாஸ் : 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் : 2 தேக்கரண்டி

வினிகர் : 1 தேக்கரண்டி

கொத்தமல்லி : சிறிதளவு

எண்ணெய் : 3 தேக்கரண்டி

செய்முறை :

● அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பை சேர்த்து பிறகு அதனுடன் 3 துளி எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

● நீரானது கொதி வந்தவுடன் எடுத்து வைத்துள்ள நூடுல்ஸை போட்டு 3 நிமிடம் வேக வைக்கவும்(நீங்கள் வாங்கியுள்ள நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரப்படி நூடுல்ஸை வேக வைக்கவும்.)

● அடுப்பை அணைத்து விட்டு நூடுல்ஸில் உள்ள நீர் மொத்தமாக வடியும்படி துளை உள்ள பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

● நீர் வடிந்தவுடன் சிறிதளவு எண்ணெய்யை நூடுல்ஸ் மேல் ஊற்றி எண்ணெய் நன்கு பரவும்படி லேசாக கிளறிவிடவும்.

● இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும் அது காய்ந்ததும் எடுத்த வைத்துள்ள பொருட்களான பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் போட்டு 20 நொடிக்கு வதக்கவும் அதன் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டைகோஸ்,கேரட்,குடைமிளகாய் இவற்றை போட்டு பாதி வதக்கவும்.

● பின்னர் சிறியதாக நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை கடாயில் போட்டு 2 நிமிடத்திற்க்கு வதக்கவும்.

● அதன்பின்னர் சிறிதளவு உப்பை அதன்மேல் தூவி மறுபடியும் 2 நிமிடம் வதக்கவும்.

● இப்போது தக்காளி சாஸ்,சோயா சாஸ் மற்றும் வினிகர் மூன்றையும் சிக்கனுடன் கலந்து அந்த கிரேவியானது சிறிது கட்டியாக ஆகும் வரை காத்திருக்கவும்.

● இறுதியாக வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு சாஸூடன் நன்கு முள்கரண்டியினால் கலக்கவும்.

●  பின்னர் எடுத்து வைத்துள்ள மிளகுப் பொடி மற்றும் மிளகாய்த் தூள் இவற்றை தூவி நூடுல்ஸூடன் மறுபடியும் கலக்கவும்.

● பின்னர் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சைனீஸ் சிக்கன் நூடுல்ஸ் தயார். 

Comments

Post a Comment