கேழ்வரகு பூரி (Raagi Poori)

       இந்தக் கேழ்வரகு பூரி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான உணவு.பேரு காலத்தில் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொண்டால் அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளும் உண்ணக் கூடிய சுவையான உணவாகும். இதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்  :

கேழ்வரகு மாவு : 1 கப்
கோதுமை மாவு : 1 கப்
நெய் : 2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : பொரிப்பதற்கு

செய்முறை :

       ● கேழ்வரகு மற்றும் கோதுமை மாவை சம அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது உப்பு மற்றும் நெய்யை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

       ● பிறகு அந்த மாவில் சிறிது சிறிதாக நீர் விட்டு பூரிக்கு மாவு திரட்டுவது போல் திரட்டிக் கொள்ளவும்.

       ● திரட்டி வைத்த மாவினை சிறிய உருண்டைகளாகப் பிடித்து அதனை கோதுமை மாவில் பிரட்டி பூரியை உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

       ● இப்போது வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் திரட்டி வைத்த பூரியை போட்டு சிறிது நேரம் கழித்து இன்னொரு புறம் திருப்பி விடவும்.



       ● அதன்பின் வாணலில் இருந்து பூரியை எடுத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது உங்களின் விருப்படி பரிமாறவும்.
இப்போது மிகவும் சுவையான மற்றும் சுலபமான ராகி பூரி தயார்.

குறிப்பு :

கேழ்வரகு மாவை மட்டும் கொண்டு பூரி செய்ய இயலாது.அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்துக் கொள்ளவும்.

கேழ்வரகுடன் உப்பினை சிறிதளவே சேர்க்க வேண்டும்.ஏனெனில் கேழ்வரகானது அதிகம் உப்பை எடுத்துக் கொள்ளாது.

பூரி சுடும் போது ஒருமுறை மட்டுமே அதனை திருப்புங்கள் இரண்டு அல்லது மூன்று முறை திருப்பினால் எண்ணெய்யை அதிகம் உறிஞ்சும்.

Comments

Post a Comment