கம்பு மோர்(Millet Buttermilk)


தேவையான பொருட்கள்:

கம்பு மாவு : 2 தேக்கரண்டி
மோர் : 1 கப்
தண்ணீர்:2 கப்
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை:

       ● ஒரு பாத்திரத்தில்  இரண்டு தேக்கரண்டி கம்பு மாவு மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு கட்டிப்படாத அளவிற்கு கரைத்துக் கொள்ளவும்.

       ● இக்கலவையானது கட்டியாக(thick) இருக்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் இதனை நாம் 3 நிமிடத்திற்கு சமைக்க போகிறோம்.

       ● பிறகு அடுப்பை பற்ற வைத்துவிட்டு சிறிதளவு உப்பு மற்றும் அதனுடன் எடுத்து வைத்துள்ள மோரை ஊற்றி குறைவான சூட்டில் 2 முதலில் 3 நிமிடம் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.

       ● இவ்வாறு செய்வதால் கலவையானது கட்டிப்பதத்துடன் வருவது மட்டுமில்லாமல் அதனுடைய பச்சை வாசனையும் மறையும்.

       ● இக்கலவையானது சிறிது கட்டிப் பதத்திற்கு வந்தால் போதுமானது. மிகவும் கட்டியாகக் கூடாது.

       ● இப்போது அடுப்பை அணைத்து விட்டு 3 நொடிக்கு காத்திருக்கவும் சூடு இறங்கியதும் அதனை ஒரு டம்ளரில் மாற்றி பரிமாறலாம்.

       ● இதனுடன் சிறிதளவு துருவிய இஞ்சி மற்றும் சிறிதளவு பச்சை மிளகாய் இவற்றை சேர்த்தும் அருந்தலாம் அல்லது நமக்கு பிடித்த சாஸ் வகைகளில் ஏதேனும் ஒன்றுடன் குடிக்கலாம்.(நமது விருப்பத்திற்க்கேற்ப)

குறிப்பு :

       ஒரு கப் மோருக்கு இரண்டு கப் நீர் போதுமானது.

       தண்ணீர் சேர்க்க விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக மோரை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம்.

       இனிப்பான கலவைக்கு நன்கு கொதிக்க வைத்த பாலுடன் சக்கரை மற்றும் கம்பு மாவைக் கலந்து தயாரித்தால் சுவையான பாயாசம் தயார்.

Comments

Post a Comment