செம்பருத்தி பூ டீ (Hibiscus Tea)

        செம்பருத்தி பூ இதயத்திற்கு மிகவும் நல்லது,இதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு.இதனை தினமும் குடித்து வர இதயப் பிரச்சனைகள் நீங்கும்.முடி உதிர்தல் பிரச்சனைகள் குறையும்.உடல் எடையும் வேகமாகக் குறையும்.


தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ : 2
வெல்லம்/தேன் : 1 தேக்கரண்டி
எலுமிச்சை : 1
தண்ணீர் : 200 மிலி

செய்முறை:

        □ முதலில் செம்பருத்தி பூவின் மகரந்தங்கள் மற்றும் காம்பினை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் எடுத்து நீரில் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.

        □ அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் அல்லது சக்கரை சேர்த்துக் கொள்ளவும்.

        □ பிறகு செம்பருத்தி இதழ்களை சேர்க்கவும், லேசான கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மூடியை போட்டு மூடி விட வேண்டும்.

        □ சிறிதுநேரம் கழித்து வடிகட்டியைக் கொண்டு வடிகட்டி ஒரு டம்ளர் டீ-க்கு அரை தேக்கரண்டி எலுமிச்சம் பழம் போதுமானது,அதனை செம்பருத்தி
டீ-யுடன் சேர்த்தால் சத்தான செம்பருத்தி டீ தயார்.

குறிப்பு :

        வெல்லம்/சக்கரைக்கு பதிலாக தேனுடன் கலந்தும் குடிக்கலாம்.

        உங்கள் விருப்பப்பத்திற்கேற்ப இதனுடன் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

        ஒரு டம்ளர் டீ-க்கு 2 செம்பருத்தி இதழ் 1/2 எலுமிச்சை சாறு போதும்.

        அடுக்கு செம்பருத்தி பூவை  பயன்படுத்தக் கூடாது.

Comments

Post a Comment