ஐயர் வீட்டு வத்த குழம்பு (Brahmin Style Vathha Kozhambu)

        மிகவும் குறைவான நேரத்தில் குறைந்த பொருட்களை வைத்து சுவையாக செய்யக் கூடிய ஐயர் வீட்டு வத்தக் குழம்பு செய்யும் முறையை காணலாம்.



தேவையான பொருட்கள்:

கடுகு  : 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு  : 1/2 தேக்கரண்டி
வெந்தயம் : சிறிதளவு
புளி  : நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய்  : 3 தேக்கரண்டி
மிளகு தக்காளி வத்தல் : 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
குழம்புத் தூள் : 2 தேக்கரண்டி
அரிசி மாவு : 1 தேக்கரண்டி
பெருங்காயம் : சிறிதளவு 
வெல்லம் : 1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை : சிறிதளவு 


செய்முறை :

       ◇  புளியை அரை மணி நேரம் ஊற வைத்து கரைசலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

       ◇  ஒரு  தேக்கரண்டி அரிசி மாவில் தேவையான அளவு நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

       ◇ அடுப்பில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,துவரம் பருப்பு,வெந்தயம் சேர்க்கவும்.கடுகு பொரிந்ததும் எடுத்து வைத்துள்ள மிளகு தக்காளி வத்தல் மற்றும் கறிவேப்பிலை சிறிது பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

       ◇ குறைந்த அனலிலே அடுப்பை வைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள்,குழம்புத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

       ◇ பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை அதனுள் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அதிக அனலில் 3 நிமிடம் கொதிக்க விடவும் .

       ◇ அதன்பிறகு ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்க்கவும்,அது கரைந்ததும் உப்பு சுவையை சரிபார்த்து கரைத்து வைத்துள்ள ஒரு தேக்கரண்டி அரிசி மாவை குழம்பில் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும் .

       ◇ இறுதியாக மீதமுள்ள ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை  குழம்பின் மேல் ஊற்றவும்.

《குறிப்பு 》

        குழம்பின் பதத்தினை பார்த்து அதற்க்கேற்றவாறு நீர் சேர்த்துக் கொள்ளவும்.ஏனெனில் இது ஆறியதும் சிறிது கட்டி தன்மைக்கு வரும்.


Comments