காளிஃப்ளவர் ஊத்தப்பம்(Cauliflower Uttappam)



《 தேவையான பொருட்கள்  》

எண்ணெய் (தேவைக்கேற்ப )
சீரகம் : 1/4 தேக்கரண்டி 
காளிஃப்ளவர் : 2 கப் 
வெங்காயம்  : 1 கப் 
தக்காளி : 1 கப் 
இஞ்சி/பூண்டு விழுது : 1/4 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி 
மல்லித்தூள் : 1 தேக்கரண்டி 
மிளகாய்த்தூள் : 1 1/2 தேக்கரண்டி 
கரம் மசாலாத்தூள் : 1/4 தேக்கரண்டி 
உப்பு (தேவைக்கேற்ப )
தோசை மாவு (தேவைக்கேற்ப )

《 செய்முறை 》

       1. இரண்டு கப் அளவிலான காளிஃப்ளவரை எடுத்து உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

       2. அடுப்பை பற்ற வைத்து வாணலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

       3. வெங்காயம் சிறிது வதங்கியதும், இஞ்சி/பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

       4. தக்காளி மசிந்ததும் எடுத்து வைத்துள்ள  மசாலா தூள்களை சேர்த்து பிரட்டவும்.பின்னர் பொடியாக நறுக்கிய காளிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.(காளிஃப்ளவர் குறைந்த நேரத்தில் வெந்து விடும் அதனால் அதிகப்படியான நீர் தேவைப்படாது)

       5. காளிஃப்ளவர் கிரேவி கட்டியான பதத்திற்கு வந்தவுடன் இறக்கிக் கொண்டு,அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடேறியதும் மாவை எடுத்து மெல்லியதாக ஊற்றாமல் கனமாக ஊற்றிக் கொள்ளவும் .

       6. இப்போது மாவின் மேல் காளிஃப்ளவர் கிரேவியை தோசை மாவு முழுவதும் படரவிட்டு,லேசாக கரண்டியினால் காளிஃப்ளவரை அழுத்தி விடவும்.அப்போது தான் மாவில் அது ஒட்டும்.

       7. இப்போது தோசையை சுற்றி மற்றும் மேலே எண்ணெய் ஊற்றி குறைந்த அனலில் விடவும்.

       8. சிறிது நேரம் கழித்து தோசையை திருப்பி மறுபடியும் அதன்மேல் எண்ணெய் விட்டு, லேசாக அழுத்தி அடிப்பகுதி சிவக்கும் வரை குறைந்த அனலில் விடவும்.

       9. இப்போது சுவையான காளிஃப்ளவர் ஊத்தப்பம் தயார். இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்..

Comments