சிக்கன் ஆம்லெட் (Chicken Omelette)

        அதிக புரோட்டீன் மற்றும்  கலோரி நிறைந்துள்ள இந்த ஆம்லெட்டை மதிய உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். டையட்டை பின்பற்றுபவர்களுக்கு இந்த உணவு உடல் எடை குறைய மிகவும் உபயோகமாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :

முட்டை : 2
சிக்கன் : 50 கிராம் (எலும்பில்லாதது)
குடை மிளகாய் : 1 தேக்கரண்டி
வெங்காயம் : 2 அ 3 தேக்கரண்டி
தக்காளி : 2 தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் (தேவையெனில் )

செய்முறை:

       ♤ முதலில் முட்டையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

       ♤ பிறகு எலும்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,பின் குடைமிளகாய் , வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

       ♤ அடுப்பை குறைவான அனலில் வைத்து தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

       ♤ பின்னர் சிக்கன் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொண்டு அதனுடன் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ,(சில்லி ப்ளேக்ஸ் சிறிதளவு : தேவையெனில் தூவிக் கொள்ளவும்).இதனை 2 நிமிடம் வரை வதக்கவும்.

       ♤ பிறகு வதக்கிய அனைத்தையும் தவாவில் நன்கு படரவிட்டு கலக்கி வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் தவா முழுவதும் ஊற்றவும்.

       ♤ தவாவை மூடி போட்டு மூடி குறைந்த அனலிலே தொடர்ந்து 2 நிமிடம் விடவும்.

       ♤ இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அந்த அனலிலே சிறிது நேரம் மூடி போட்டு மூடி விடவும்.

        ♤ இப்போது சுவையான சிக்கன் ஆம்லெட் தயார்.இதில் 220 கலோரீஸ் 28 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது..

Comments