பருப்பு கடையல்(Dhaal Fry)

       
        மிகவும் எளிதாக சீக்கிரமே செய்யக் கூடிய பருப்பு கடையல் செய்யும் முறையை பார்ப்போம்.


$ தேவையான பொருட்கள் $

நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி 
சீரகம் : 1தேக்கரண்டி 
மிளகு : 1/2 தேக்கரண்டி 
சின்ன வெங்காயம் : 6
பச்சை மிளகாய் : 4
பூண்டு : 5
துவரம் பருப்பு : 1/2 கப் 
பெருங்காயம் : சிறிதளவு 
கறிவேப்பிலை/கொத்தமல்லி

$ செய்முறை $

       ☆ துவரம் பருப்பை நன்கு அலசி அரை நேரம் ஊற வைத்த பின் அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில்  5 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் .

       ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

       ☆ வெங்காயம் பொன் நிறமானதும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

       ☆ பின்னர் வாணலை இறக்கி வேக வைத்த பருப்பை அடுப்பில் வைத்து அதனுடன் வதக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்தபின் சிறிதளவு நீர்,கறிவேப்பிலை, கொஞ்சம் கூடுதலாக கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும் .

       ☆ அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு, சூடான சாதம் மற்றும் நெய் சேர்த்து பரிமாறவும்.


<< குறிப்பு >>

        பருப்பை கொதிக்க விடும் போதே தேவையான நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் இட்டு அரைக்கும் போது நீர் சேர்க்கக் கூடாது.

Comments