ஆம்லெட் கிரேவி (Dhaba style omelette curry)


தேவையான பொருட்கள்:

முட்டை : 5
வெங்காயம் : 3
தக்காளி : 1
இஞ்சி : சிறிதளவு
பூண்டு : சிறிதளவு
மிளகாய்த் தூள் : 1 தேக்கரண்டி
தனியாத் தூள் : 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
சீரகத் தூள் : 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : 1 தேக்கரண்டி
எண்ணெய் : 2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
கொத்தமல்லி : சிறிதளவு

செய்முறை:

        ● முதலில் ஒரு பெரிய வெங்காயம் எடுத்துக் கொண்டு அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

        ● பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

        ● அடுப்பில் தவாவை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலக்கி வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றவும்.

        ● 2 நிமிடம் கழித்து ஆம்லெட்டை படத்தில் காட்டியுள்ளபடி மடித்துக் கொள்ளவும்.


        ● பின்னர் மடித்து வைத்துள்ள ஆம்லெட்டை தேவையான அளவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.வெட்டிய துண்டுகள் 1 நிமிடத்திற்கு அனலிலே இருக்கட்டும்.


        ● இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இரண்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

        ● பச்சை வாசனை போன பின்னர் அதனுடன் எடுத்து வைத்துள்ள மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 

        ● பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து மூடி போட்டு மூடி 1 நிமிடம் வரை காத்திருக்கவும்.தக்காளி நன்கு குழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

        ● ஒரு கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை கிரேவியில் போட்டு, பின் அதனுடன் ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து கொதிக்க விடவும். 

        ● இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் ஆம்லெட் கிரேவி தயார்.

Comments

  1. அருமை நான் செய்து பார்த்தேன்

    ReplyDelete

Post a Comment