முட்டை மிளகு குழம்பு(Egg Pepper Gravy)




தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை : 6
எண்ணெய் : 2 தேக்கரண்டி
கடுகு : 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : சிறிதளவு
பூண்டு : 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் : 20
தக்காளி : 3
உப்பு : தேவையான அளவு
பச்சை மிளகாய் (தேவையெனில் )

《 அரைக்க 》

மிளகு : 1 தேக்கரண்டி
சோம்பு : 1 தேக்கரண்டி
கசகசா : 1 தேக்கரண்டி
முந்திரி : 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் : 1/2 மூடி

செய்முறை :

       ■ வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை,இடித்து வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.


       ■ பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்நிறமானதும் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

       ■ இது வதங்கும் நேரத்தில் அரைக்க எடுத்துக் கொண்ட மிளகு,கசகசா, சோம்பு, முந்திரி சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காயை நீருடன்  சேர்த்து மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

       ■ தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிதளவு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு,வேகவைத்து லேசாக கீறிய முட்டையை சேர்த்து  6 நிமிடம் கொதிக்க விடவும்.

       ■ பின்னர் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மிளகு முட்டை குழம்பு தயார்.

《 குறிப்பு 》

        காரம் தேவையெனில் இதனுடன் மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

        இறுதியாக 2 பச்சை மிளகாயை லேசாக கீறி கிரேவியில் போடலாம்.

Comments

  1. Woowwwwwww innaniku itha veetla try pana sola poren

    ReplyDelete

Post a Comment