முட்டை ரோல் (Egg Roll)


தேவையான பொருட்கள்:

முட்டை : 5
பச்சை வெங்காயம் : 2
கேரட் : 2
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை:

        ₹ ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

        ₹ பிறகு வெங்காயத் தாள் மற்றும் கேரட்டை பொடிப் பொடியாக நறுக்கி முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

        ₹ ஒரு தாவாவை (Non stick pan) அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றி தவா முழுவதும் படர விடவும்.


        ₹ சிறிதுநேரம் கழித்து முட்டையை மெதுவாக மடித்துக் கொண்டு அதனை ஒரு ஓரத்தில் வைத்து மீதமுள்ள இடத்தில் முட்டைக் கலவையை ஊற்றி படர விடவும்.(படத்தில் காட்டியுள்ளபடி)

        ₹ மடித்து வைத்துள்ள ஆம்லெட்டுடன் சேர்த்து ஊற்றிய கலவை வெந்ததும் அதனுடன் சேர்த்து மடித்து அதனை தவாவின் ஓரம் வைக்கவும்.


        ₹ இதேபோல் முட்டைக் கலவை தீரும் வரை இதே முறையை பின்பற்றவும்.

        ₹ இப்போது அடுப்பை அணைத்து விட்டு முட்டை ரோலை ஒரு தட்டில் மாற்றி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான சாஸூடன் பரிமாறவும்.

        ₹ மிகவும் சுலபமாக செய்யக் கூடிய எக் ரோல் தயார்.முயற்சித்துவிட்டு உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

Comments

Post a Comment