கடாய் பன்னீர் மசாலா (Kadai Panner Recepie)

       சுலபமான முறையில் ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :

வதக்கி அரைக்க:

எண்ணெய் : 2 தேக்கரண்டி
வெங்காயம்:1(நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி : 2
மல்லித் தூள் :1 தேக்கரண்டி
சீரகத் தூள் : 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் :1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் :1 1/2 தேக்கரண்டி

தாளிக்க :

வெண்ணெய்:சிறிதளவு
கொத்தமல்லி விதை: 2 (அ) 3
பச்சை மிளகாய்:1(சிறிதாக நறுக்கியது )
இஞ்சி/பூண்டு விழுது: சிறிதளவு
பச்சை குடைமிளகாய் :சிறிதளவு
மஞ்சள் குடைமிளகாய்:சிறிதளவு
வெங்காயம் :சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பன்னீர் :150 (அ) 200 கிராம்
கொத்தமல்லி தழை: சிறிதளவு

செய்முறை:

       ■ அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,வெங்காயம் பொன் நிறமானதும் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூடி விடவும். 

       ■ இரண்டு நிமிடம் கழித்து தக்காளி நன்கு வதங்கி அதன் பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். 

       ■ ஒரு தேக்கரண்டி மல்லித் தூள், ஒரு தேக்கரண்டி சீரகத் தூள்,ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்,ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள் (உங்களுக்கு தேவையான அளவு காரம் சேர்த்துக் கொள்ளலாம்)சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

       ■ பின்னர் வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி சிறிது ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

       ■ பிறகு அடுப்பில் கடாயை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் கால் தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சிறிதளவு கொத்தமல்லி விதையை(தட்டியது) அதில் போடவும்,அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

       ■ இவற்றின் பச்சை வாசனை நீங்கியதும் பச்சை குடைமிளகாய்,மஞ்சள் குடைமிளகாய் மற்றும் அரை பெரிய வெங்காயம் ஆகியவற்றை சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.

       ■ குடைமிளகாய்,வெங்காயம் பாதி வதக்கினால் போதும் முழுவதும் வதக்க வேண்டாம் அதனால் ஒரு நிமிடம் அதிக அனலில் வைத்து வதக்கி விடவும்.

       ■ பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       ■ இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.இதன் பச்சை வாசனை நீங்கியதும் எடுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் மசாலா தயார்.

       ■ இதனை ரொட்டி ,நான் ,பரோட்டா,
சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :

         தினமும் பயன்படுத்தும் மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்தால் நல்ல நிறத்துடன் வரும்.

        பன்னீர் துண்டுகளை நேரடியாக உபயோகிக்காமல் அதனை தோசைக் கல்லில் போட்டு சிறிது வறுத்து சிவப்பு நிறமானதும் அதனை எடுத்து இக்கலவையில் சேர்த்தும் சமைக்கலாம்.

Comments