மதுரை கோழிக்கறி சால்னா(Madurai Style Chicken Salna)


தேவையான பொருட்கள் :

எண்ணெய் : 3 தேக்கரண்டி
பட்டை : 1
கிராம்பு : 2
பச்சை மிளகாய் : 3
பெரிய வெங்காயம் : 3(நீளவாக்கில்                                                                நறுக்கியது)
இஞ்சி/பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
தக்காளி (சிறியது) : 2
காஷ்மீர் மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
மல்லித் தூள் : 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
கோழி : 1 கிலோ

《 வறுத்து அரைக்க 》

எண்ணெய் : 1 தேக்கரண்டி
ஏலக்காய் : 1
கிராம்பு : 3
கல்பாசி : 1
மிளகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் : 2 தேக்கரண்டி
முந்திரி : 5
கசகசா : 1 தேக்கரண்டி
தேங்காய் : 1/2 கப்
காய்ந்த மிளகாய் : 4 (2 மணி நேரம் ஊற                                                            வைத்தது)

செய்முறை:

       《 அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,கல்பாசி,
மிளகு,சீரகம்,பெருஞ்சீரகம்,முந்திரி,
கசகசா மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

       《 இதனுடன் ஊற வைத்த மிளகாய் சேர்த்து சூடு தணிந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

       《 வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,கீறிய பச்சை மிளகாய்,நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி/பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

       《 பின்னர் காஷ்மீர் மிளகாய்த் தூள்(உங்கள் தேவைக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)மல்லித் தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       《 அதன்பின் அரைத்து வைத்த விழுதை இதனுடன் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும் பின் குழம்பிற்கு தேவையான உப்பை சேர்த்து கொண்டு சுத்தம் செய்து வைத்துள்ள கோழியை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

       《 இதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 20 முதல் 30 நிமிடம் வரை கொதிக்க விடவும். (கோழி வேகும் வரை)
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடவும்.

       《 இந்த சால்னாவை பரோட்டா,சப்பாத்தி, முட்டை தோசை ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :

       இதனை குக்கரில் இரண்டு விசில் விட்டும் இறக்கி எடுக்கலாம்.

Comments