மலேசியன் சிக்கன் கிரேவி (Malaysian style chicken curry)

தேவையான பொருட்கள் :

சிக்கன் : 750 கிராம்
தேங்காய்ப் பால் : 400 மிலி
பெரிய வெங்காயம் : 1 (சிறியதாக                                                                நறுக்கியது)
பச்சை மிளகாய் : 3
எலுமிச்சை பழம் : அரை
நட்சத்திர சோம்பு : 2
மிளகுப் பொடி : 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் : 2 தேக்கரண்டி
தனியாத் தூள் : 1 தேக்கரண்டி
சீரகத் தூள் : 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி
கிராம்பு : 2
பட்டை : சிறிதளவு
ஏலக்காய் : 6
கறிவேப்பிலை : சிறிதளவு
இஞ்சி/பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்:3(அ)4 தேக்கரண்டி

செய்முறை:

       ○ அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.

       ○ எண்ணெய் காய்ந்ததும் பட்டை மற்றும் நட்சத்திர சோம்பை போட்டுக் கொள்ளவும். 

       ○ பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

       ○ அதன் பிறகு எடுத்து வைத்துள்ள இஞ்சி/பூண்டு விழுது, கிராம்பு,பட்டை,ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

       ○ பின்னர் மசாலா பொருட்களான மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள்,பெருஞ்சீரகத்தூள்,தனியாத் தூள்,மிளகுத் தூள் மற்றும் அரை எலுமிச்சம் பழம் , நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

       ○ அதன் பின்னர் சிக்கன் துண்டுகளை கடாயில் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.(தேவையெனில் சிக்கனுடன் சிறிது உப்பை சேர்த்து பத்து நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளலாம்)

       ○ சிக்கனுடன் முன்பே உப்பை சேர்க்கவில்லையெனில் இப்போது உப்பை சேர்த்து மசாலாவானது சிக்கனில் இறங்குமாறு குறைந்த அனலில் வைத்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

       ○ இறுதியாக எடுத்து வைத்துள்ள தேங்காய்ப பாலை கடாயில் ஊற்றி சிக்கன் வேகும் வரை கொதிக்க விடவும். (20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை)
தேவையெனில் இன்னும் அதிகம் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலின் அளவைக் குறைத்து விட்டு நீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடலாம்.



       ○ கிரேவியின் பதத்தினை உங்கள் விருப்பப்படி முடிவு செய்து கொண்டு நேர அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யுங்கள்.கிரேவி கட்டியாக வேண்டுமெனில் நீர் இறுகும் வரை கொதிக்கவிடவும்.

       ○ இப்போது மிகவும்  சுவையான காரமான மலேசியன் சிக்கன் கிரேவி தயார்.

Comments

Post a Comment