வெங்காயச் சட்னி (Onion chutney)


தேவையான பொருட்கள்:

புளி : 1 எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் : 2
பூண்டு : 4
மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி
கடுகு : சிறிதளவு
உளுத்தம் பருப்பு : சிறிதளவு
எண்ணெய் : 2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க:

எண்ணெய் : 1 தேக்கரண்டி
வர மிளகாய் : 12
வெந்தயம் : சிறிதளவு
கொத்தமல்லி விதை : சிறிதளவு

செய்முறை:

       ☆ ஒரு எலுமிச்சை அளவு புளியை சிறிதளவு சுடு நீரில் போட்டு ஊற வைத்து கரைத்து கரைசலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

       ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாயை வதக்கவும் அதனுடன் சிறிதளவு வெந்தயம் மற்றும் தனியா சேர்த்து 3 நிமிடம்  வதக்கவும்.

       ☆ பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளலாம்.

       ☆ கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்,பொன் நிறமானதும் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல்,அரைத்த மிளகாய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

       ☆ நன்கு நீர் வற்றி கட்டியான உடன், இதனை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

       ☆ வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிறிது உளுந்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்,பூண்டு பொன் நிறமானதும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பின் அதனுடன் அரைத்த சட்னியை ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.

        வித்தியாசமான சுவையான வெங்காயச் சட்னி தயார்.

Comments