உருளைக்கிழங்கு கட்லெட் (Potato Cutlet)



தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு : 6
பச்சை பட்டாணி : 1/2 கப்
கேரட் : 1(துருவியது)
வெங்காயம் : 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் : 2
கொத்தமல்லி தழை : சிறிதளவு
கறிவேப்பிலை : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த் தூள் : 1/2                                                                             தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : 1/2 தேக்கரண்டி
சீரகம் : 1/4 தேக்கரண்டி
ரவை : 1/2 கப்
எண்ணெய் : 2 தேக்கரண்டி

செய்முறை:

       ● அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து லேசாக வதக்கியபின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

       ● பின் பட்டாணி,கேரட்,சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். 

       ● பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

       ● பின்னர் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்து மசாலா இறங்குமாறு கிளறி விடவும்..


       ● இதனை வேறு ஒரு தட்டில் மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் அரை கப் ரவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

       ● இரண்டு கைகளிலும் எண்ணெய் தொட்டு உருளைக்கிழங்கு கலவையை சிறிது உருண்டையாகப் பிடித்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டிக் கொள்ளவும்.


       ● இறுதியாக அதனை இருபுறமும் ரவையில் பிரட்டி வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இதனை பொன் நிறமாக மாறும் வரை காத்திருந்து மறுபுறமும் இதேபோல் செய்யவும்.


        இப்போது சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.

Comments