சின்ன வெங்காய சாம்பார் (Small Onion Sambar)



தேவையான பொருட்கள்:

எண்ணெய் : 2 தேக்கரண்டி
கடுகு : 1/4 தேக்கரண்டி
சீரகம் : 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் : 20
தக்காளி : 1
துவரம் பருப்பு : 150 கிராம்
புளி : நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
சாம்பார் தூள் : 2 தேக்கரண்டி
ரசம் தூள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
பெருங்காயம் : சிறிதளவு
கறிவேப்பிலை/கொத்தமல்லி :சிறிதளவு

செய்முறை :

        ☆ பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து,குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.

        ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

        ☆ வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் ஒரு டம்ளர் பருப்பு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதி விடவும்.

        ☆ பின்னர் கரைத்து வைத்த புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

        ☆ அதன்பின் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கொதித்ததும்,அரை தேக்கரண்டி ரசம் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

        ☆ இப்போது வேறு ஒரு வாணலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம்,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அதனை சாம்பாரில் ஊற்றவும்.

        ☆ பின்னர் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வெங்காய சாம்பார் தயார்.

குறிப்பு :

          காரம் தேவையெனில் இதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

Comments