கிராமத்து மீன் குழம்பு (Village Style Fish Gravy)


தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் : 6 தேக்கரண்டி
கடுகு : சிறிதளவு
வெந்தயம் : சிறிதளவு
சின்ன வெங்காயம் : 15
பூண்டு : 7
இஞ்சி/பூண்டு விழுது : 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி  : சிறிதளவு
கல் உப்பு : தேவைக்கேற்ப
வஞ்சரம் மீன் :1/4 கிலோ
புளி : எலுமிச்சை அளவு

《 மசாலாவிற்கு 》

சின்ன வெங்காயம் : 10
பூண்டு : 5
பச்சை மிளகாய் : 2
நாட்டு தக்காளி : 2
சீரகம் : 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
குழம்புத் தூள் : 2 தேக்கரண்டி
மல்லித் தூள் : 2 தேக்கரண்டி

செய்முறை:

       ♧ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

       ♧ தக்காளி நன்கு வதங்கியதும் எடுத்து வைத்துள்ள மசாலாத் தூளை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

       ♧ சூடு தணிந்ததும் இதனை மிக்ஸியில் இட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும் .

       ♧ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும், பின் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

       ♧ வெங்காயம் பொன் நிறமானதும் இஞ்சி/பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் அரைத்து வைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.

       ♧ கொதி வந்ததும் கரைத்து வைத்த புளிக் கரைசல்,தேவையான அளவு உப்பு,சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக 8 நிமிடம்  கொதிக்க விடவும்.

       ♧ நன்கு கொதி வந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை குறைந்த அனலில் 2 நிமிடம் அப்படியே விட்டு விடவும்.

       ♧ அலசி வைத்த மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.

குறிப்பு : 

       ¤ நல்லெண்ணெயில் சமைப்பதால் சுவை கூடுதலாக இருக்கும் .

       ¤ குழம்பை சமைத்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.

       ¤ நாட்டுத் தக்காளிக்கு பதில் பெங்களுர் தக்காளி எடுத்துக் கொண்டால் புளியின் அளவை சிறிதளவு கூட்டிக் கொள்ளவும். ஏனெனில் பெங்களுர் தக்காளியில் புளிப்பு சுவை குறைவு.

       ¤ இறுதியாக குழம்பின் மேல் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுவதால் குழம்பின் சுவை கூடுதலாக இருக்கும் .




Comments