கோதுமை பரோட்டா (Wheat Parotta)


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு : 1 கப்
எண்ணெய் : 2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை :

        ● ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவைப் போல் பிரட்டிக் கொள்ளவும்.

        ● பிரட்டிய மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.அப்போது தான் பரோட்டா மிருதுவாக இருக்கும்.

        ● அரை மணி நேரம் கழித்து மாவில் பிரட்டி சப்பாத்தி மாவை பெரியதாக திரட்டிக் கொள்ளவும்.

       ●  திரட்டியவுடன் அந்த மாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு முழுவதும் தடவிக் கொள்ளவும்.

        ● பிறகு அதனை விசிறி செய்ய மடிப்பது போல் முன்னும் பின்னுமாக மடித்து லேசாக அதனை நீளவாக்கில் இழுத்துக் கொண்டு, ஒரு மூலையில் இருந்து  சுருட்டிக் கொண்டே வந்து அடுத்த மூலையை நடுவில் வைத்து அழுத்தி ஒட்டிவிடவும்.



        ● இப்போது சுருட்டி வைத்திருக்கும் மாவை லேசாக திரட்டி தோசைக் கல்லில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

        ● கல்லில் இருந்து  பரோட்டாவை எடுத்து மைதா பரோட்டா போல் வேகமாக அழுத்தாமல் லேசாக அழுத்தி விட்டால் போதுமானது.

Comments

Post a Comment