கோழி மிளகு வறுவல் (Chicken Pepper Fry)

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி
சோம்பு : 1 தேக்கரண்டி
வர மிளகாய் : 5 (அ) 6
கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி
வெங்காயம் : 1(சிறிதாக வெட்டியது)
உப்பு : தேவைக்கேற்ப
கோழித்துண்டுகள்:1/4 கிலோ                                                           (சிறிதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் : 1 தேக்கரண்டி
தயிர் : 2 தேக்கரண்டி
மிளகு தூள் : 2 தேக்கரண்டி

செய்முறை :

       ♤ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,வர மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வெங்காயம் பாதி அளவு பொன் நிறமானதும்,சிறிதாக நறுக்கி வைத்துள்ள கோழித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

       ♤ அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இதனை அடிப்பிடிக்காத படி இரண்டு நிமிடத்திற்கு  கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.

       ♤ கோழித் துண்டுகளானது முக்கால் பதம் வெந்தவுடன்,இரண்டு தேக்கரண்டி தயிரை சேர்த்து ஒரு நிமிடம் வரை பிரட்டவும்.


       ♤ பின்னர் அடுப்பை அணைத்து விட்டு மிளகுத்தூள் தூவி பிரட்டி இறக்கினால் சுவையான மிளகு கோழிக் கறி தயார்.

Comments