ரைஸ் ரெஸிபி(Cooked Rice Recipe Snack )


《 தேவையான பொருட்கள் 》

வெஜிடேபிள் ரைஸ் : 2 கப்
ரவை : 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி
மிளகாய் செதில்கள் : 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி 
உப்பு : தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை : 1 தேக்கரண்டி
ப்ரட் தூள் : தேவைக்கேற்ப

《 செய்முறை 》

       ◇ முதல் நாள் இரவு சமைத்த வெஜிடேபிள் ரைஸ் இரண்டு கப் அளவிற்கு ஒரு பௌலில் எடுத்து அதனை நன்கு பிசைந்து கொள்ளவும்.

       ◇ பின்னர் இதனுடன் ரவை,கரம் மசாலா, பெருங்காயத் தூள்,மிளகாய் செதில்கள்(Chilly Flakes),மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு (ஏற்கனவே சாதத்தில் உப்பு இருப்பதால் உப்பை போடும் முன் கவனமாக இருக்கவும்) மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசையவும்.

       ◇ இக்கலவையை 10 நிமிடத்திற்கு தட்டு போட்டு மூடி வைக்கவும். இப்படி செய்தால் ரவை அந்த நீர் முழுவதையும் உறிஞ்சி விடும்.இப்போது இந்த கலவையுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.


       ◇ பின் உள்ளங்கையில் எண்ணெய்யை தடவி பிசைந்த மாவினை ஒரு பெரிய உருண்டையாக எடுத்துக் கொண்டு அதனை உள்ளங்கையில் வைத்து வடை மாதிரி தட்டையாக செய்யவும்.

       ◇ பின் சப்பாத்திக் கட்டையில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன்மேல் இந்த தட்டை வடிவிலான மாவை வைத்து அதன் வடிவத்தை சரி செய்து கொள்ளவும்.


       ◇ குக்கி கட்டர் (Cookie Cutter) இருந்தால் அதனை பயன்படுத்தி நமக்கு தேவையான வடிவில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஏதேனும் மூடியை உபயோகித்தும் இதனை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

       ◇ வெட்டி எடுத்த துண்டுகளை ப்ரட் தூளில் பிரட்டி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

       ◇ பின் அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த ரைஸ் துண்டுகளை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.


        ◇ இதனை தக்காளி கெட்ச்-அப் உடன் பரிமாறலாம்.

Comments