காளிஃப்ளவர் கட்லெட் (Gobi cutlet)



《 தேவையான பொருட்கள் 》

காளிஃப்ளவர் : 1 கப்(பொடிதாக                                                   நறுக்கியது)
கடலை மாவு : 3 தேக்கரண்டி
அரிசி மாவு : 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் :1
மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி
செலரி விதைகள் : 1/4 தேக்கரண்டி
சீரகம் : 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா : 1/4 தேக்கரண்டி
உப்பு : 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் : சிறிதளவு
கொத்தமல்லி தழை : ஒரு கைப்பிடி
எண்ணெய் : தேவைக்கேற்ப

《 செய்முறை 》

       ♡ முதலில் ஒரு பௌலில் பொடிதாக நறுக்கிய ஒரு கப் காளிஃப்ளவர், 3 தேக்கரண்டி கடலை மாவு,3 தேக்கரண்டி அரிசி மாவு,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி, செலரி விதைகள்,சீரகம்,கரம் மசாலா, பெருங்காயம்,கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும்.

       ♡ காளிஃப்ளவர் கட்லெட் செய்யத் தேவையான கலவை தயார்.

       ♡ இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவினை கையில் வடை போல் தட்டிக் கொண்டு அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

       ♡ இருபுறமும் திருப்பி பொன்நிறமாகும் வரை பொரியவிட்டு எடுத்தால் சுவையான கோபி கட்லெட் தயார்.

       ♡ இதனை சாஸ் உடன் பரிமாறினால் கூடுதல் சுவையாக இருக்கும்.

Comments