உருளைக்கிழங்கு பட்டன்ஸ்(Potato Buttons Snack)

        உருளைக்கிழங்கு பட்டன் ஸ்னாக் மிகவும் மொறுமொறுப்பான குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய சுவையான உணவாகும்.அதன் செய்முறையைக் காண்போம்.


《தேவையான பொருட்கள்》

செலரி விதைகள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
ரவை : 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு :  4(அ)5
மிளகுத் தூள் : 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி
எள் விதைகள் : தேவையெனில்

《செய்முறை》

       ◇ முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு செலரி விதைகளை போடவும்.

       ◇ பின்னர் 1/4 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் 1 1/2 தேக்கரண்டி மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து நன்கு கட்டியாகாத படி கலக்கவும்.

       ◇ கலக்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை மூடி போட்டு மூடி 10 நிமிடத்திற்கு காத்திருக்கவும்.

       ◇ 10 நிமிடம் கழித்து பார்த்தால் ரவையானது நீர் அணைத்தையும் உறிஞ்சி இருக்கும்.இப்போது அதனை ஒரு தட்டில் மாற்றவும்.

       ◇ ரவை கலவை மேலும் மிருதுவாக அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


       ◇ இப்போது வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து அதனை துருவி எடுத்துக் கொள்ளவும்.

       ◇ துருவிய உருளைக்கிழங்குடன் 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள்,1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்,1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

       ◇ அதன்பின் ரவைக் கலவையையும், உருளைக்கிழங்கு கலவையையும் ஒன்று சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும்.



       ◇ இப்போது சப்பாத்தி கட்டையில் எண்ணெய்யை தடவி பிசைந்த மாவை அதில் வைத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டிக் கொள்ளவும்(மெலிதாக திரட்டாமல் சிறிது கனமாக திரட்டவும்).

       ◇ பின்னர் ஒரு பாட்டிலின் சிறிய மூடியை எடுத்து அதனுள் சிறிதளவு எண்ணெய் தடவி திரட்டிய மாவில் சிறிய சிறிய வட்டமாக பதித்து எடுக்கவும்.


       ◇ மீதமுள்ள மாவை எடுத்து விட்டு அந்த பட்டனை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.


       ◇ பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருளைக்கிழங்கு பட்டனை அதில் போட்டு பொன்நிறமாகும் வரை திருப்பி விட்டு பொரித்து எடுக்கவும்.

       ◇ இப்போது சுவையான மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு பட்டன் தயார். இதனுடன் தக்காளி சாஸ் கொண்டு பரிமாறவும்.


《குறிப்பு》

        இந்த உருளைக்கிழங்கு பட்டனை பொரிக்கும் முன் அதில் சிறிதளவு எள் விதைகளை லேசாக அழுத்தி விட்டு பொரித்தும் எடுக்கலாம்.

Comments