உருளைக்கிழங்கு மஞ்சூரியன் (Potato Manchurian)

        உருளைக்கிழங்கு மஞ்சூரியன் சுலபமாக செய்யக் கூடிய சைனீஸ் ஸ்னாக். இதன் செய்முறையைக் காண்போம்.


《 தேவையான பொருட்கள் 》

மைதா : 1/2 கப்
சோள மாவு : 2 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி
எண்ணெய்  : தேவைக்கேற்ப
வேகவைத்த உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 1
பூண்டு : 6 (அ) 8
குடை மிளகாய் : 2
கரம்  மசாலா : 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் சாஸ் : 1 தேக்கரண்டி
காயந்த மிளகாய் சாஸ் : 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் : 2 தேக்கரண்டி
சோயா சாஸ் : 2 தேக்கரண்டி
வினிகர் : 1 1/2 தேக்கரண்டி

《 செய்முறை 》

       ♧ ஒரு பௌலில் அரை கப் மைதா, இரண்டு தேக்கரண்டி சோள மாவு, 1/4 தேக்கரண்டி உப்பு,1/2 தேக்கரண்டி தனி மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       ♧ பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கட்டியாகாத படி கலக்கவும்.(மாவு கரைசல் தண்ணியாக இருக்க கூடாது)

       ♧ இப்போது உருளைக்கிழங்கை வேக வைத்து அதனை சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

       ♧ உருளைக்கிழங்கை பொரிக்க அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அந்த துண்டுகளை கரைத்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.

       ♧ அதிக அனலில் 2 நிமிடம் இருந்தால் போதுமானது. இது பொன்நிறமானதும் வெளியே எடுத்து விடவும்.

       ♧ பின்னர் வேறு ஒரு வாணலில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சிறியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்றாக பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

       ♧ இதன்பின் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு குடைமிளகாய், சிறிதளவு உப்பு,1/4 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

       ♧ பின் இதனுடன் பச்சைமிளகாய் சாஸ், காய்ந்த மிளகாய் சாஸ்,தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் வினிகர்  சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.

       ♧ பின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை இதில் கொட்டி நன்கு கிளறி விடவும். 


       ♧ இப்போது சுவையான சைனீஸ் ஸ்டைல் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்.

குறிப்பு

        உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது கால் அளவு வேக வைத்தால் போதும். குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் நிறுத்திக் கொள்ளவும்.

Comments