உருளைக்கிழங்கு தவா சான்ட்விச் (Potato Tava Sandwich)

    மிகவும் சுலபமான முறையில் செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சான்விட்ச் சமைக்கும் முறையைக் காண்போம்.


தேவையான பொருட்கள்:

ரவை : 1/2 கப்
தயிர் : 1/4 கப்
உப்பு : தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா : 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு : 2 (வேக வைத்தது)
வெங்காயம் : 1 (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் : 1(சிறிதாக நறுக்கியது)
குடைமிளகாய் : 1(சிறிதாக நறுக்கியது)
கரம் மசாலா தூள் : 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் : 1/4  தேக்கரண்டி

செய்முறை :

       ● முதலில் ஒரு பௌலில் 1/2 கப் ரவை, 1/4 கப் தயிர், 1/4 தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       ● பின்னர் பௌலை 10 நிமிடத்திற்கு ஒரு தட்டு போட்டு மூடி விடவும்.

       ● அதன்பின் வேக வைத்த உருளைக்கிழங்குடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், குடைமிளகாய்,கரம் மசாலா தூள், 1/4 தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகாய்த் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

       ● இப்போது ரவை கலவையை பார்த்தால் அதன் நீரை முழுவதுமாக உறிஞ்சி இருக்கும்.இதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

       ● இதன்பின் அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து கல்லின் மேல் ஊற்றவும்(சிறியதாக).

       ● பின் அதன் மேல் எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டிக் கொண்டு அதனை தோசைக் கல்லில் ஊற்றிய மாவின் மேல் வைக்கவும்.


       ● பின்னர் அந்த உருளைக்கிழங்கு கலவை தெரியாதபடி அதன்மேல் ரவை மாவை மேலே ஊற்றவும்.


       ● பின் அதன்மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முடி போட்டு 2 நொடிகள் மூடி விடவும்.

       ● பிறகு இதனை மெதுவாக திருப்பி இன்னொரு புறமும் வேக விடவும்.அதேபோல் மாற்றி மாற்றி திருப்பி விடவும்.

       ● பொன்நிறமானதும் அதனை எடுத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

       ● இப்போது சுவையான உருளைக்கிழங்கு தவா சான்ட்விச் தயார்.

Comments