வெங்காய ரவை தோசை (Onion Rava Dosa)



தேவையான பொருட்கள் :-

அரிசி மாவு           : 1 கப்
ரவை                        : 3/4 கப்
மைதா மாவு          : 1 தேக்கரண்டி
சீரகம்                       : 1 தேக்கரண்டி
மிளகு                       : 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  : 3 (பொடியாக                                                                      நறுக்கியது)
வெங்காயம்           :  2 (பொடியாக                                                                          நறுக்கியது)
கறிவேப்பில்லை : சிறிதளவு (பொடியாக                                                     நறுக்கியது)
உப்பு                        : தேவையான அளவு

செய்முறை :-

               * எடுத்துக் கொண்ட அனைத்து பொருட்களையும் தேவையான அளவு நீர் சேர்த்து தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.



               *அதனை 20 நிமிடத்திற்க்கு அப்படியே விட்டு விடவும்.

               * ஊறிய பின்னர் மாவு கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிதளவு நீர் விட்டு தண்ணியாக கரைத்துக் கொள்ளவும்.


               * பின்னர் அடுப்பை பற்ற வைத்து தோசைக் கல் காய்ந்ததும் கரைத்த மாவினை ஊற்றி தேவையான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து 3 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.. (தோசையை திருப்ப வேண்டாம்.)

Comments