கேழ்வரகு சப்பாத்தி (Raggi Chapathi)


உடலுக்கு சத்தான கேழ்வரகு சப்பாத்தி செய்யும் முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு - 1/2 கப்
தண்ணீர். - 1/2 கப்
உப்பு.          - தேவையான அளவு

செய்முறை :-

          # ஒரு பௌலில் அரை கப் கேழ்வரகு மாவினை எடுத்துக் கொள்வோம்.

          # எந்த கப்பில் மாவினை அளக்கிறோமோ அதே கப்பில் அதே அளவு தண்ணீரை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

          # இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரை  ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

          # அதனுடன் தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

          # தண்ணீர் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த மாவை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்.

          # மாவானது நன்கு வெந்து விடும். இப்போது அடுப்பை அணைத்து விடவும்.

          # அந்த மாவினை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி கையில் தண்ணீர் தொட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

          # மாவை உருண்டையாக திரட்டியதும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

          # இப்போது சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும்.(உருண்டைகளை திரட்ட சப்பாத்தி மாவினை பயன்படுத்தவும்.)

          # பின்னர் தோசைக் கல் காய்ந்ததும் அதில் திரட்டிய சப்பாத்தியை போட்டு இரு பக்கவும் திருப்பி விடவும். (பின் தேவையெனில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.)

           # இப்போது சுவையான உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கேழ்வரகு சப்பாத்தி தயார்.

Comments