கேழ்வரகு வடை (Raggi Vada)


      மிகவும் சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான கேழ்வரகு வடை செய்யும் முறையைக் காண்போம்.

தேவையான பொருட்கள் :-

1. கேழ்வரகு மாவு.         - 1 கப்
2. அரிசி மாவு.                 - 1/4 கப்
3. மிளகாய்த் தூள்.       - 1 தேக்கரண்டி
4.பெருங்காயத் தூள்  - 1/2 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் - 1
6. பச்சை மிளகாய்.      -  2
7. கறிவேப்பில்லை.    -  சிறிதளவு
8. முருங்கை இலை.    - சிறிதளவு
9. இஞ்சி.                           - சிறிதளவு
10. உப்பு.                            -  தேவைக்கேற்ப
11. சீரகம்.                         - 1 தேக்கரண்டி


<<செய்முறை>>

            *  ஒரு பௌலில் மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்.

           * பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


           * கையில் வடை மாவு ஒட்டாமல் இருக்க இரு கைகளிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடையை தட்டிக் கொள்ளவும்.

           * கேழ்வரகு வடை பெரியதாக இருந்தால் சுவையாக இருக்காது. அதனால் சிறியதாக தட்டவும்.


            * இப்போது ஒரு வாணலில் தேவையான அளவு எண்ணெய் எடுத்துக் கொண்டு காய்ந்ததும் வடையை பொரித்துக் கொள்ளவும்.

           * கேழ்வரகு மாவானது வேகுவதற்கு குறைந்தது 8 நிமிடங்களாவது ஆகும். அதுவரை காத்திருந்து அடர்(dark) பொன்னிறமான பின்னர் எடுக்கவும்.

           * இப்போது சுவையான எளிதில் செய்யக் கூடிய ஆரோக்கியமான மாலை உணவு தயார்.

<<குறிப்பு>>

1. குழந்தைகளுக்கு கொடுக்க பச்சை மிளகாய்க்கு பதில் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

2. அரிசி மாவுக்கு பதில் பொட்டுக் கடலை மாவு அல்லது வேர்க்கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.

3.  சீரகத்திற்கு பதில் ஓமம் சேர்த்துக் கொள்ளலாம்.

4. உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

Comments