சோள தோசை (Sorghum Dosai/Millet Dosai)


தேவையான பொருட்கள் :-

மாவு அரைக்க...


1. இட்லி அரிசி             -   1 கப்
2. வெள்ளை சோளம் -   1 கப்
3. உளுத்தம் பருப்பு    -  1/2 கப்
4. வெந்தயம்                 -   1 தேக்கரண்டி

        # இட்லி அரிசி, சோளம் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றுசேர கலந்து மூன்றிலிருந்து நான்கு முறை நன்கு கழுவிக் கொள்ளவும். 

         # பின்னர் அதனுடன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.


            # ஆறு மணிநேரத்திற்குப் பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

           # மாவை அரைத்த பின் அதனை புளிக்க வைக்க 8 மணி நேரம் மூடிபோட்டு மூடிவிடவும்.

           # 8 மணி நேரம் கழித்தபின் மாவானது நன்றாக பொங்கி வந்திருக்கும். 


            # இப்போது தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்ததிற்கு கரைத்து வைத்துக் கொண்டு தோசையாக வார்க்க வேண்டும்.



பலன்கள்:-

  >> சோளத்தை நாம் உணவாக உட்கொள்வதால் இதில் உள்ள அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக உள்ளது.

>> நீரிழிவு நோயைக் குறைக்கும் தன்மை கொண்டதால்  நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.

>> கோதுமையை ஒப்பிடும்போது இதில் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது.

Comments