Posts

Showing posts from October, 2018

குதிரைவாலி வெஜ் கிச்சடி (Millet Veg Kichadi)

Image
தேவையான பொருட்கள் :  குதிரைவாலி : 200 கிராம்  பீன்ஸ் : 100 கிராம் (சிறிதாக நறுக்கியது)  கேரட் : 100 கிராம் (சிறிதாக நறுக்கியது)  பட்டாணி :60 கிராம்  பெரிய வெங்காயம் :2 (சிறிதாக நறுக்கியது)  தக்காளி :2 (சிறிதாக நறுக்கியது) தேங்காய் : சிறிதளவு தாளிப்பதற்கு : எண்ணெய் :2 தேக்கரண்டி கடுகு: சிறிதளவு உளுத்தம் பருப்பு : 1/4 தேக்கரண்டி கடலை பருப்பு : 1/4 தேக்கரண்டி பச்சை மிளகாய் : 2 இஞ்சி : சிறிதளவு (துருவியது) பெருங்காயம் : சிறிதளவு மஞ்சள் தூள் : சிறிதளவு கறிவேப்பிலை : சிறிதளவு கொத்தமல்லி : சிறிதளவு செய்முறை     # முதலில்  குதிரைவாலியை நன்கு மண் போக கலைந்து விட்டு பத்து நிமிடம் ஊற வைத்து பின் நீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.    # ஒரு பங்கு குதிரைவாலிக்கு இரண்டே கால் பங்கு தண்ணீர் கொண்டு வேக வைக்க வேண்டும். அதாவது 200 கிராம் குதிரை வாலிக்கு 450 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.    #  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்

தினை அரிசி அடை (Thinai Rice Adai)

Image
தேவையான பொருட்கள் : தினை அரிசி        : 1 கப் துவரம் பருப்பு      : 1/4 கப் பாசிப் பருப்பு        : 1/4 கப் தனியா                    : 1 தேக்கரண்டி  காய்ந்த மிளகாய் : 4 பூண்டு                      : 5 பல்  தாளிப்பதற்கு : எண்ணெய்             : 2 தேக்கரண்டி கடுகு                         : 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு   : 1/4 தேக்கரண்டி கடலை பருப்பு        : 1/4 தேக்கரண்டி வெங்காயம்            : 1 பெரியது பெருங்காயம்         : சிறிதளவு கறிவேப்பிலை       : சிறிதளவு செய்முறை :     ● மேற்சொன்ன தினை அரிசி,பாசிப் பருப்பு மற்றும் துவரம் பருப்பு மூன்றையும் 3 மணி நேரம் ஊற வைத்து,பின் அதனுடன் தனியா,காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.       ●  ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம்,கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.    ●  தாளித்தவை சிறிது ஆறியதும், அவற்றை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு சிறிது சிறிதாக அடையாக தோசைக் கல்லில் இடவு

வரகு முறுக்கு (Millet Rice Murruku)

Image
தேவையான பொருட்கள் : வரகு : 100 கிராம் உளுந்த மாவு : 6 தேக்கரண்டி கடலை மாவு : 9 தேக்கரண்டி பொட்டுக்கடலை மாவு:3தேக்கரண்டி சீரகம் : 1/4 தேக்கரண்டி எள் : 1/4 தேக்கரண்டி வெண்ணெய் :2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப செய்முறை :    ● வரகு மற்றும் உளுந்தை நன்கு வாசம் வரும் வரை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும் .     ● வறுத்தவற்றை சூடு தனிந்ததும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும் .     ● ஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவு,உளுந்து மாவு,பொட்டுக் கடலை மாவு,சீரகம்,எள்,வெண்ணெய்,உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.      ●  இந்த மாவு அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து கொண்டு,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.                   ● பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்காக பிழிந்து விடவும் .       ● இருபுறமும் சத்தம் அடங்கும் வரை பொறியவிட்டு எடுத்தால் சத்தான வரகு முறுக்கு தயார்..

கேழ்வரகு லட்டு(Raagi Laddu)

Image
            கேழ்வரகு லட்டு மிகவும் சத்தான அதே சமயம் சுலபமாக செய்யக் கூடிய நம் பாரம்பரிய உணவு..இதை எப்படி செய்வோம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :  கேழ்வரகு மாவு : 2 கப்  வெல்லம்             : 1 கப் (தட்டியது)  ஏலக்காய்            : 6 (பொடித்தது)  முந்திரி                : சிறிதளவு  நெய்                     : 8 தேக்கரண்டி செய்முறை :                முதலில் வாணலில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு எடுத்து வைத்துள்ள கேழ்வரகு மாவைக் கொட்டி மிதமான சூட்டில் நன்கு மணம் வரும் வரை ஒரு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.பிறகு முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.             கேழ்வரகு மாவு சூடு ஆறியதும் அதனுடன் தட்டி வைத்தள்ள வெல்லம்,ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.             பிறகு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொண்டு ..மீதமுள்ள நெய்யை மிதமான சூட்டில் எடுத்துக் கொண்டு மாவில் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் ..இப்போது சுவையான ராகி லட்டு தயார்..