Posts

Showing posts from August, 2020

கேழ்வரகு சப்பாத்தி (Raggi Chapathi)

Image
உடலுக்கு சத்தான கேழ்வரகு சப்பாத்தி செய்யும் முறையைக் காண்போம். தேவையான பொருட்கள் :- கேழ்வரகு - 1/2 கப் தண்ணீர். - 1/2 கப் உப்பு.          - தேவையான அளவு செய்முறை :-           # ஒரு பௌலில் அரை கப் கேழ்வரகு மாவினை எடுத்துக் கொள்வோம்.           # எந்த கப்பில் மாவினை அளக்கிறோமோ அதே கப்பில் அதே அளவு தண்ணீரை அளந்து எடுத்துக் கொள்ளவும்.           # இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரை  ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.           # அதனுடன் தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவும்.           # தண்ணீர் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த மாவை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்.           # மாவானது நன்கு வெந்து விடும். இப்போது அடுப்பை அணைத்து விடவும்.           # அந்த மாவினை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி கையில் தண்ணீர் தொட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.           # மாவை உருண்டையாக திரட்டியதும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.           # இப்போது சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும்.(உருண்டை

ரோட்டுக் கடை சால்னா (Hotel Style Salna)

Image
        ஓட்டல் ஸ்டைல் பரோட்டா சால்னா செய்யும் முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்:- தேங்காய் - 1/3 கப் முந்திரி -10 எண்ணெய் - 4 தேக்கரண்டி சோம்பு - 2 தேக்கரண்டி பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 6 ஏலக்காய் - 4 பிரிஞ்சி இலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 2  தக்காளி - 2 (medium size) பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி சிக்கன் மசாலா தூள் - 2 தேக்கரண்டி கடலை மாவு - 1/2 தேக்கரண்டி புதினா இலை - சிறிதளவு கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைப்பதற்கு :- தேங்காய் - 1/3 மூடி முந்திரி - 10 (அ) கசகசா - 1 தேக்கரண்டி செய்முறை :-           √ முதலில் தேங்காய் விழுது அரைத்துக் கொள்ளலாம்.            √ அதற்கு எடுத்துக் கொண்ட 1/3 மூடி தேங்காவை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.           √ அதனுடன் 10 முந்திரியை சேர்த்து மைய அரைத்துக் கொண்டு பின் ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.           √ பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்

கேழ்வரகு வடை (Raggi Vada)

Image
      மிகவும் சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான கேழ்வரகு வடை செய்யும் முறையைக் காண்போம். தேவையான பொருட்கள் :- 1. கேழ்வரகு மாவு.         - 1 கப் 2. அரிசி மாவு.                 - 1/4 கப் 3. மிளகாய்த் தூள்.       - 1 தேக்கரண்டி 4.பெருங்காயத் தூள்  - 1/2 தேக்கரண்டி 5. பெரிய வெங்காயம் - 1 6. பச்சை மிளகாய்.      -  2 7. கறிவேப்பில்லை.    -  சிறிதளவு 8. முருங்கை இலை.    - சிறிதளவு 9. இஞ்சி.                           - சிறிதளவு 10. உப்பு.                            -  தேவைக்கேற்ப 11. சீரகம்.                         - 1 தேக்கரண்டி <<செய்முறை>>             *  ஒரு பௌலில் மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்.            * பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.            * கையில் வடை மாவு ஒட்டாமல் இருக்க இரு கைகளிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடையை தட்டிக் கொள்ளவும்.            * கேழ்வரகு வடை பெரியதாக இருந்தால் சுவையாக இருக்காது. அதனால் சிறியதாக

சோள தோசை (Sorghum Dosai/Millet Dosai)

Image
தேவையான பொருட்கள் :- மாவு அரைக்க... 1. இட்லி அரிசி             -   1 கப் 2. வெள்ளை சோளம் -   1 கப் 3. உளுத்தம் பருப்பு    -  1/2 கப் 4. வெந்தயம்                 -   1 தேக்கரண்டி         # இட்லி அரிசி, சோளம் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றுசேர கலந்து மூன்றிலிருந்து நான்கு முறை நன்கு கழுவிக் கொள்ளவும்.           # பின்னர் அதனுடன் வெந்தயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.             # ஆறு மணிநேரத்திற்குப் பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.            # மாவை அரைத்த பின் அதனை புளிக்க வைக்க 8 மணி நேரம் மூடிபோட்டு மூடிவிடவும்.            # 8 மணி நேரம் கழித்தபின் மாவானது நன்றாக பொங்கி வந்திருக்கும்.              # இப்போது தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்ததிற்கு கரைத்து வைத்துக் கொண்டு தோசையாக வார்க்க வேண்டும். பலன்கள்: -   >> சோளத்தை நாம் உணவாக உட்கொள்வதால் இதில் உள்ள அதிகப்படியான நார்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக உள்ளது. >> நீரிழி