கேழ்வரகு சப்பாத்தி (Raggi Chapathi)
உடலுக்கு சத்தான கேழ்வரகு சப்பாத்தி செய்யும் முறையைக் காண்போம். தேவையான பொருட்கள் :- கேழ்வரகு - 1/2 கப் தண்ணீர். - 1/2 கப் உப்பு. - தேவையான அளவு செய்முறை :- # ஒரு பௌலில் அரை கப் கேழ்வரகு மாவினை எடுத்துக் கொள்வோம். # எந்த கப்பில் மாவினை அளக்கிறோமோ அதே கப்பில் அதே அளவு தண்ணீரை அளந்து எடுத்துக் கொள்ளவும். # இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். # அதனுடன் தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவும். # தண்ணீர் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த மாவை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும். # மாவானது நன்கு வெந்து விடும். இப்போது அடுப்பை அணைத்து விடவும். # அந்த மாவினை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி கையில் தண்ணீர் தொட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். # மாவை உருண்டையாக திரட்டியதும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். # இப்போது சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும்.(உருண்டை