Posts

Showing posts from December, 2018

ரவை ஸ்னாக்ஸ் (Semolina Snacks)

Image
        ரவையை வைத்து செய்யக் கூடிய ஸ்னாக்ஸ் தேநீருடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு மாதத்திற்கு வைத்திருந்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இப்போது செய்முறை முறையைக் காண்போம். 《 தேவையான பொருட்கள் 》 கோதுமை மாவு : 1 கப் ரவை : 1/2 கப் மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : தேவைக்கேற்ப கடுகு : 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் : 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் : 2 வேர்க்கடலை : 1/4 கப் பாசிப் பருப்பு : 1/3 கப் கடலை பருப்பு : 1/4 கப் முந்திரி : 8 (அ) 10 மாங்காய் பொடி : 1 தேக்கரண்டி 《 செய்முறை 》        ¤ ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, மிளகாய்த் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.        ¤ பின்னர் இந்த மாவில் 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.        ¤ எண்ணெய்யானது மாவில் இந்த அளவிற்கு இருந்தால் தான் மாவினை உள்ளங்கையில் அழுத்தி பிடிக்கும் போது உடைந்து விழாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.        ¤ எண்ணெய் ஊற்றி மாவினை பிசைந்த பின் சிறிதளவு மாவினை கையில் எடுத்து அழுத்துங்கள் உடைந்து விழுந்தால்

ரைஸ் ரெஸிபி(Cooked Rice Recipe Snack )

Image
《 தேவையான பொருட்கள் 》 வெஜிடேபிள் ரைஸ் : 2 கப் ரவை : 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் : 1/4 தேக்கரண்டி பெருங்காயம் : 1/4 தேக்கரண்டி மிளகாய் செதில்கள் : 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி  உப்பு : தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை : 1 தேக்கரண்டி ப்ரட் தூள் : தேவைக்கேற்ப 《 செய்முறை 》        ◇ முதல் நாள் இரவு சமைத்த வெஜிடேபிள் ரைஸ் இரண்டு கப் அளவிற்கு ஒரு பௌலில் எடுத்து அதனை நன்கு பிசைந்து கொள்ளவும்.        ◇ பின்னர் இதனுடன் ரவை,கரம் மசாலா, பெருங்காயத் தூள்,மிளகாய் செதில்கள்(Chilly Flakes),மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு (ஏற்கனவே சாதத்தில் உப்பு இருப்பதால் உப்பை போடும் முன் கவனமாக இருக்கவும்) மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசையவும்.        ◇ இக்கலவையை 10 நிமிடத்திற்கு தட்டு போட்டு மூடி வைக்கவும். இப்படி செய்தால் ரவை அந்த நீர் முழுவதையும் உறிஞ்சி விடும்.இப்போது இந்த கலவையுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.        ◇ பின் உள்ளங்கையில் எண்ணெய்யை தடவி பிசைந்த மாவினை ஒரு பெரிய உருண்டையாக எடுத்துக் கொண்டு அதனை உள்ளங்கையில் வை

உருளைக்கிழங்கு மஞ்சூரியன் (Potato Manchurian)

Image
        உருளைக்கிழங்கு மஞ்சூரியன் சுலபமாக செய்யக் கூடிய சைனீஸ் ஸ்னாக். இதன் செய்முறையைக் காண்போம். 《 தேவையான பொருட்கள் 》 மைதா : 1/2 கப் சோள மாவு : 2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி எண்ணெய்  : தேவைக்கேற்ப வேகவைத்த உருளைக்கிழங்கு : 2 வெங்காயம் : 1 பூண்டு : 6 (அ) 8 குடை மிளகாய் : 2 கரம்  மசாலா : 1/4 தேக்கரண்டி பச்சை மிளகாய் சாஸ் : 1 தேக்கரண்டி காயந்த மிளகாய் சாஸ் : 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் : 2 தேக்கரண்டி சோயா சாஸ் : 2 தேக்கரண்டி வினிகர் : 1 1/2 தேக்கரண்டி 《 செய்முறை 》        ♧ ஒரு பௌலில் அரை கப் மைதா, இரண்டு தேக்கரண்டி சோள மாவு, 1/4 தேக்கரண்டி உப்பு,1/2 தேக்கரண்டி தனி மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.        ♧ பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கட்டியாகாத படி கலக்கவும்.(மாவு கரைசல் தண்ணியாக இருக்க கூடாது)        ♧ இப்போது உருளைக்கிழங்கை வேக வைத்து அதனை சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.        ♧ உருளைக்கிழங்கை பொரிக்க அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும

காளிஃப்ளவர் கட்லெட் (Gobi cutlet)

Image
《 தேவையான பொருட்கள் 》 காளிஃப்ளவர் : 1 கப்(பொடிதாக                                                   நறுக்கியது) கடலை மாவு : 3 தேக்கரண்டி அரிசி மாவு : 3 தேக்கரண்டி பச்சை மிளகாய் :1 மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி செலரி விதைகள் : 1/4 தேக்கரண்டி சீரகம் : 1/4 தேக்கரண்டி கரம் மசாலா : 1/4 தேக்கரண்டி உப்பு : 1/2 தேக்கரண்டி பெருங்காயம் : சிறிதளவு கொத்தமல்லி தழை : ஒரு கைப்பிடி எண்ணெய் : தேவைக்கேற்ப 《 செய்முறை 》        ♡ முதலில் ஒரு பௌலில் பொடிதாக நறுக்கிய ஒரு கப் காளிஃப்ளவர், 3 தேக்கரண்டி கடலை மாவு,3 தேக்கரண்டி அரிசி மாவு,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி, செலரி விதைகள்,சீரகம்,கரம் மசாலா, பெருங்காயம்,கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும்.        ♡ காளிஃப்ளவர் கட்லெட் செய்யத் தேவையான கலவை தயார்.        ♡ இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவினை கையில் வடை போல் தட்டிக் கொண்டு அதனை எண்ணெயில் ப

உருளைக்கிழங்கு பட்டன்ஸ்(Potato Buttons Snack)

Image
        உருளைக்கிழங்கு பட்டன் ஸ்னாக் மிகவும் மொறுமொறுப்பான குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய சுவையான உணவாகும்.அதன் செய்முறையைக் காண்போம். 《தேவையான பொருட்கள்》 செலரி விதைகள் : 1/2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : தேவைக்கேற்ப ரவை : 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு :  4(அ)5 மிளகுத் தூள் : 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் : 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள் : 1/2 தேக்கரண்டி எள் விதைகள் : தேவையெனில் 《செய்முறை》        ◇ முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு செலரி விதைகளை போடவும்.        ◇ பின்னர் 1/4 தேக்கரண்டி உப்பு , எண்ணெய் 1 1/2 தேக்கரண்டி மற்றும் ஒரு கப் ரவை சேர்த்து நன்கு கட்டியாகாத படி கலக்கவும்.        ◇ கலக்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை மூடி போட்டு மூடி 10 நிமிடத்திற்கு காத்திருக்கவும்.        ◇ 10 நிமிடம் கழித்து பார்த்தால் ரவையானது நீர் அணைத்தையும் உறிஞ்சி இருக்கும்.இப்போது அதனை ஒரு தட்டில் மாற்றவும்.        ◇ ரவை கலவை மேலும் மிருதுவாக அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிர

முட்டையில்லாத பேன்கேக் (Soft Fluffy Eggless Pancake)

Image
        மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் சுலபமாக மற்றும் மிருதுவான முட்டையில்லாத பேன்கேக் உணவு முறையின் செய்முறையைக் காண்போம்.குறைந்த நேரத்தில் செய்வதால் காலை நேர உணவிற்கு மிகவும் பொருத்தமானதும் கூட. 《 தேவையான பொருட்கள் 》 மைதா மாவு : 2 கப் சர்க்கரை தூள் : 2 தேக்கரண்டி உப்பு : 1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் : 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா : 1/2 தேக்கரண்டி பால் : 1 கப் நெய் : 2 தேக்கரண்டி 《 செய்முறை 》        ♤ ஒரு பௌலில் இரண்டு கப் மைதா மாவு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.        ♤ பின்னர் இந்த மாவில் உருக்கிய இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து விட்டு பின் அதனுடன் ஒரு கப் பால் சேர்த்து கட்டிப்படாத படி கலக்கி விடவும்.        ♤ மாவானது மிகவும் கட்டியாகவும் இருக்கக்கூடாது,அல்லது தண்ணீர் பதத்துடனும் இருக்கக் கூடாது..மாவின் கலவையை சரியான அளவில் பால் விட்டு கலக்கி எடுத்துக் கொள்ளவும்.        ♤ இப்போது அடுப்பை பற்ற வைத்து தவாவில் சிறிதளவ

உருளைக்கிழங்கு தவா சான்ட்விச் (Potato Tava Sandwich)

Image
    மிகவும் சுலபமான முறையில் செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சான்விட்ச் சமைக்கும் முறையைக் காண்போம். தேவையான பொருட்கள்: ரவை : 1/2 கப் தயிர் : 1/4 கப் உப்பு : தேவைக்கேற்ப பேக்கிங் சோடா : 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு : 2 (வேக வைத்தது) வெங்காயம் : 1 (சிறிதாக நறுக்கியது) பச்சை மிளகாய் : 1(சிறிதாக நறுக்கியது) குடைமிளகாய் : 1(சிறிதாக நறுக்கியது) கரம் மசாலா தூள் : 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் : 1/4  தேக்கரண்டி செய்முறை :        ● முதலில் ஒரு பௌலில் 1/2 கப் ரவை, 1/4 கப் தயிர் , 1/4 தேக்கரண்டி உப்பு, 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.        ● பின்னர் பௌலை 10 நிமிடத்திற்கு ஒரு தட்டு போட்டு மூடி விடவும்.        ● அதன்பின் வேக வைத்த உருளைக்கிழங்குடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், குடைமிளகாய்,கரம் மசாலா தூள், 1/4 தேக்கரண்டி உப்பு மற்றும் மிளகாய்த் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.        ● இப்போது ரவை கலவையை பார்த்தால் அதன் நீரை முழுவதுமாக உறிஞ்சி இருக்கும்.இதனுடன் சிறிதளவு நீர்

கோழி மிளகு வறுவல் (Chicken Pepper Fry)

Image
தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி சோம்பு : 1 தேக்கரண்டி வர மிளகாய் : 5 (அ) 6 கறிவேப்பிலை : ஒரு கைப்பிடி வெங்காயம் : 1(சிறிதாக வெட்டியது) உப்பு : தேவைக்கேற்ப கோழித்துண்டுகள்:1/4 கிலோ                                                           (சிறிதாக நறுக்கியது) மஞ்சள் தூள் : 1/4 தேக்கரண்டி மல்லித் தூள் : 1 தேக்கரண்டி தயிர் : 2 தேக்கரண்டி மிளகு தூள் : 2 தேக்கரண்டி செய்முறை :        ♤ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,வர மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வெங்காயம் பாதி அளவு பொன் நிறமானதும்,சிறிதாக நறுக்கி வைத்துள்ள கோழித் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.        ♤ அதன்பின் மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இதனை அடிப்பிடிக்காத படி இரண்டு நிமிடத்திற்கு  கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.        ♤ கோழித் துண்டுகளானது முக்கால் பதம் வெந்தவுடன் ,இரண்டு தேக்கரண்டி தயிரை சேர்த்து ஒரு நிமிடம் வரை பிரட்டவும்.        ♤ பின்னர் அடுப்பை அணைத்து விட்டு மிளகுத