Posts

Showing posts from November, 2018

சின்ன வெங்காய சாம்பார் (Small Onion Sambar)

Image
தேவையான பொருட்கள்: எண்ணெய் : 2 தேக்கரண்டி கடுகு : 1/4 தேக்கரண்டி சீரகம் : 1/4 தேக்கரண்டி சின்ன வெங்காயம் : 20 தக்காளி : 1 துவரம் பருப்பு : 150 கிராம் புளி : நெல்லிக்காய் அளவு மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி சாம்பார் தூள் : 2 தேக்கரண்டி ரசம் தூள் : 1/2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப பெருங்காயம் : சிறிதளவு கறிவேப்பிலை/கொத்தமல்லி :சிறிதளவு செய்முறை :         ☆ பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து,குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.         ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.         ☆ வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் ஒரு டம்ளர் பருப்பு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதி விடவும்.         ☆ பின்னர் கரைத்து வைத்த புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.         ☆ அதன்பின் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கொதித்ததும்,அரை தேக்கரண்டி ரசம்

முட்டை மிளகு குழம்பு(Egg Pepper Gravy)

Image
தேவையான பொருட்கள் : வேகவைத்த முட்டை : 6 எண்ணெய் : 2 தேக்கரண்டி கடுகு : 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை : சிறிதளவு கொத்தமல்லி : சிறிதளவு பூண்டு : 2 தேக்கரண்டி சின்ன வெங்காயம் : 20 தக்காளி : 3 உப்பு : தேவையான அளவு பச்சை மிளகாய் (தேவையெனில் ) 《 அரைக்க 》 மிளகு : 1 தேக்கரண்டி சோம்பு : 1 தேக்கரண்டி கசகசா : 1 தேக்கரண்டி முந்திரி : 2 தேக்கரண்டி துருவிய தேங்காய் : 1/2 மூடி செய்முறை :        ■ வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை,இடித்து வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.        ■ பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்நிறமானதும் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.        ■ இது வதங்கும் நேரத்தில் அரைக்க எடுத்துக் கொண்ட மிளகு,கசகசா, சோம்பு, முந்திரி சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காயை நீருடன்  சேர்த்து மைய விழுதாக அரைத்துக் கொள்ளவும்.        ■ தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிதளவு நீர் மற்றும் தேவை

ஐயர் வீட்டு வத்த குழம்பு (Brahmin Style Vathha Kozhambu)

Image
        மிகவும் குறைவான நேரத்தில் குறைந்த பொருட்களை வைத்து சுவையாக செய்யக் கூடிய ஐயர் வீட்டு வத்தக் குழம்பு செய்யும் முறையை காணலாம். தேவையான பொருட்கள்: கடுகு  : 1 தேக்கரண்டி துவரம் பருப்பு  : 1/2 தேக்கரண்டி வெந்தயம் : சிறிதளவு புளி  : நெல்லிக்காய் அளவு நல்லெண்ணெய்  : 3 தேக்கரண்டி மிளகு தக்காளி வத்தல் : 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப குழம்புத் தூள் : 2 தேக்கரண்டி அரிசி மாவு : 1 தேக்கரண்டி பெருங்காயம் : சிறிதளவு  வெல்லம் : 1 தேக்கரண்டி  கறிவேப்பிலை : சிறிதளவு  செய்முறை :        ◇  புளியை அரை மணி நேரம் ஊற வைத்து கரைசலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.        ◇  ஒரு  தேக்கரண்டி அரிசி மாவில் தேவையான அளவு நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.        ◇ அடுப்பில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,துவரம் பருப்பு,வெந்தயம் சேர்க்கவும்.கடுகு பொரிந்ததும் எடுத்து வைத்துள்ள மிளகு தக்காளி வத்தல் மற்றும் கறிவேப்பிலை சிறிது பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.        ◇ குறைந்த அனலிலே அடுப்பை வைத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள்,குழம்புத்தூள்

காளிஃப்ளவர் ஊத்தப்பம்(Cauliflower Uttappam)

Image
《 தேவையான பொருட்கள்  》 எண்ணெய் (தேவைக்கேற்ப ) சீரகம் : 1/4 தேக்கரண்டி  காளிஃப்ளவர் : 2 கப்  வெங்காயம்  : 1 கப்  தக்காளி : 1 கப்  இஞ்சி/பூண்டு விழுது : 1/4 தேக்கரண்டி  மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி  மல்லித்தூள் : 1 தேக்கரண்டி  மிளகாய்த்தூள் : 1 1/2 தேக்கரண்டி  கரம் மசாலாத்தூள் : 1/4 தேக்கரண்டி  உப்பு (தேவைக்கேற்ப ) தோசை மாவு (தேவைக்கேற்ப ) 《 செய்முறை 》        1. இரண்டு கப் அளவிலான காளிஃப்ளவரை எடுத்து உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.        2. அடுப்பை பற்ற வைத்து வாணலில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.        3. வெங்காயம் சிறிது வதங்கியதும், இஞ்சி/பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.        4. தக்காளி மசிந்ததும் எடுத்து வைத்துள்ள  மசாலா தூள்களை சேர்த்து பிரட்டவும்.பின்னர் பொடியாக நறுக்கிய காளிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.(காளிஃப்ளவர் குறைந்த நேரத்தில் வெந்து விடும் அதனால்

பருப்பு கடையல்(Dhaal Fry)

Image
                மிகவும் எளிதாக சீக்கிரமே செய்யக் கூடிய பருப்பு கடையல் செய்யும் முறையை பார்ப்போம். $ தேவையான பொருட்கள் $ நல்லெண்ணெய் : 2 தேக்கரண்டி  சீரகம் : 1தேக்கரண்டி  மிளகு : 1/2 தேக்கரண்டி  சின்ன வெங்காயம் : 6 பச்சை மிளகாய் : 4 பூண்டு : 5 துவரம் பருப்பு : 1/2 கப்  பெருங்காயம் : சிறிதளவு  கறிவேப்பிலை/கொத்தமல்லி $ செய்முறை $        ☆ துவரம் பருப்பை நன்கு அலசி அரை நேரம் ஊற வைத்த பின் அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில்  5 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் .        ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.        ☆ வெங்காயம் பொன் நிறமானதும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.        ☆ பின்னர் வாணலை இறக்கி வேக வைத்த பருப்பை அடுப்பில் வைத்து அதனுடன் வதக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்தபின் சிறிதளவு நீர்,கறிவேப்பிலை, கொஞ்சம் கூடுதலாக கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து ஒரு க

கிராமத்து மீன் குழம்பு (Village Style Fish Gravy)

Image
தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் : 6 தேக்கரண்டி கடுகு : சிறிதளவு வெந்தயம் : சிறிதளவு சின்ன வெங்காயம் : 15 பூண்டு : 7 இஞ்சி/பூண்டு விழுது : 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை : சிறிதளவு கொத்தமல்லி  : சிறிதளவு கல் உப்பு : தேவைக்கேற்ப வஞ்சரம் மீன் :1/4 கிலோ புளி : எலுமிச்சை அளவு 《 மசாலாவிற்கு 》 சின்ன வெங்காயம் : 10 பூண்டு : 5 பச்சை மிளகாய் : 2 நாட்டு தக்காளி : 2 சீரகம் : 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் : 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி தனி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி குழம்புத் தூள் : 2 தேக்கரண்டி மல்லித் தூள் : 2 தேக்கரண்டி செய்முறை:        ♧ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.        ♧ தக்காளி நன்கு வதங்கியதும் எடுத்து வைத்துள்ள மசாலாத் தூளை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.        ♧ சூடு தணிந்ததும் இதனை மிக்ஸியில் இட்டு சிறிது நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும் .        ♧ அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந

சிக்கன் ஆம்லெட் (Chicken Omelette)

Image
        அதிக புரோட்டீன் மற்றும்  கலோரி நிறைந்துள்ள இந்த ஆம்லெட்டை மதிய உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். டையட்டை பின்பற்றுபவர்களுக்கு இந்த உணவு உடல் எடை குறைய மிகவும் உபயோகமாக இருக்கும். தேவையான பொருட்கள் : முட்டை : 2 சிக்கன் : 50 கிராம் (எலும்பில்லாதது) குடை மிளகாய் : 1 தேக்கரண்டி வெங்காயம் : 2 அ 3 தேக்கரண்டி தக்காளி : 2 தேக்கரண்டி சில்லி ப்ளேக்ஸ் (தேவையெனில் ) செய்முறை:        ♤ முதலில் முட்டையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.        ♤ பிறகு எலும்பில்லாத சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,பின் குடைமிளகாய் , வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.        ♤ அடுப்பை குறைவான அனலில் வைத்து தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.        ♤ பின்னர் சிக்கன் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொண்டு அதனுடன் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ,(சில்லி ப்ளேக்ஸ் சிறிதளவு : தேவையெனில் தூவிக் கொள்ளவும்).இதனை 2

மதுரை கோழிக்கறி சால்னா(Madurai Style Chicken Salna)

Image
தேவையான பொருட்கள் : எண்ணெய் : 3 தேக்கரண்டி பட்டை : 1 கிராம்பு : 2 பச்சை மிளகாய் : 3 பெரிய வெங்காயம் : 3(நீளவாக்கில்                                                                 நறுக்கியது ) இஞ்சி/பூண்டு விழுது : 2 தேக்கரண்டி தக்காளி (சிறியது) : 2 காஷ்மீர் மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி மல்லித் தூள் : 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு கோழி : 1 கிலோ 《 வறுத்து அரைக்க 》 எண்ணெய் : 1 தேக்கரண்டி ஏலக்காய் : 1 கிராம்பு : 3 கல்பாசி : 1 மிளகு : 1 தேக்கரண்டி சீரகம் : 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் : 2 தேக்கரண்டி முந்திரி : 5 கசகசா : 1 தேக்கரண்டி தேங்காய் : 1/2 கப் காய்ந்த மிளகாய் : 4 (2 மணி நேரம் ஊற                                                            வைத்தது) செய்முறை:        《 அடுப்பை பற்ற வைத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,ஏலக்காய்,கிராம்பு,கல்பாசி, மிளகு, சீரகம் ,பெருஞ்சீரகம்,முந்திரி, கசகசா மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.        《 இதனுடன் ஊற வைத்த மிளகாய் சேர்த்து சூடு தணிந்ததும் மிக்ஸியில்

வெங்காயச் சட்னி (Onion chutney)

Image
தேவையான பொருட்கள்: புளி : 1 எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் : 2 பூண்டு :  4 மஞ்சள்தூள் : 1/2 தேக்கரண்டி கடுகு : சிறிதளவு உளுத்தம் பருப்பு : சிறிதளவு எண்ணெய் : 2 தேக்கரண்டி வறுத்து அரைக்க: எண்ணெய் : 1 தேக்கரண்டி வர மிளகாய் : 12 வெந்தயம் : சிறிதளவு கொத்தமல்லி விதை : சிறிதளவு செய்முறை:        ☆ ஒரு எலுமிச்சை அளவு புளியை சிறிதளவு சுடு நீரில் போட்டு ஊற வைத்து கரைத்து கரைசலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.        ☆ அடுப்பை பற்ற வைத்து வாணலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாயை வதக்கவும் அதனுடன் சிறிதளவு வெந்தயம் மற்றும் தனியா சேர்த்து 3 நிமிடம்  வதக்கவும்.        ☆ பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளலாம்.        ☆ கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்,பொன் நிறமானதும் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல்,அரைத்த மிளகாய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.        ☆ நன்கு

உருளைக்கிழங்கு கட்லெட் (Potato Cutlet)

Image
தேவையான பொருட்கள்: வேகவைத்த உருளைக்கிழங்கு : 6 பச்சை பட்டாணி : 1/2 கப் கேரட் : 1(துருவியது) வெங்காயம் : 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் : 2 கொத்தமல்லி தழை : சிறிதளவு கறிவேப்பிலை : சிறிதளவு உப்பு : தேவைக்கேற்ப மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த் தூள் : 1/2                                                                             தேக்கரண்டி கரம் மசாலா தூள் : 1/2 தேக்கரண்டி சீரகம் : 1/4 தேக்கரண்டி ரவை : 1/2 கப் எண்ணெய் : 2 தேக்கரண்டி செய்முறை:        ● அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து லேசாக வதக்கியபின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.        ● பின் பட்டாணி,கேரட்,சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.         ● பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.        ● பின்னர் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்து மசாலா இறங்குமாறு கிளறி விடவும்..        ● இதனை வேறு ஒரு தட்டில் மாற்றி அதனுடன் பொ

கடாய் பன்னீர் மசாலா (Kadai Panner Recepie)

Image
       சுலபமான முறையில் ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைல் கடாய் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : வதக்கி அரைக்க: எண்ணெய் : 2 தேக்கரண்டி வெங்காயம்:1(நீளவாக்கில் நறுக்கியது) தக்காளி : 2 மல்லித் தூள் :1 தேக்கரண்டி சீரகத் தூள் : 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் :1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் :1 1/2 தேக்கரண்டி தாளிக்க : வெண்ணெய்:சிறிதளவு கொத்தமல்லி விதை: 2 (அ) 3 பச்சை மிளகாய்:1(சிறிதாக நறுக்கியது ) இஞ்சி/பூண்டு விழுது: சிறிதளவு பச்சை குடைமிளகாய் :சிறிதளவு மஞ்சள் குடைமிளகாய்:சிறிதளவு வெங்காயம் :சிறிதளவு உப்பு : தேவையான அளவு பன்னீர் :150 (அ) 200 கிராம் கொத்தமல்லி தழை: சிறிதளவு செய்முறை:        ■ அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,வெங்காயம் பொன் நிறமானதும் தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூடி விடவும்.         ■ இரண்டு நிமிடம் கழித்து தக்காளி நன்கு வதங்கி அதன் பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவு

கோதுமை பரோட்டா (Wheat Parotta)

Image
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு : 1 கப் எண்ணெய் : 2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப செய்முறை :         ● ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவைப் போல் பிரட்டிக் கொள்ளவும்.         ● பிரட்டிய மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.அப்போது தான் பரோட்டா மிருதுவாக இருக்கும்.         ● அரை மணி நேரம் கழித்து மாவில் பிரட்டி சப்பாத்தி மாவை பெரியதாக திரட்டிக் கொள்ளவும்.        ●  திரட்டியவுடன் அந்த மாவில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு முழுவதும் தடவிக் கொள்ளவும்.         ● பிறகு அதனை விசிறி செய்ய மடிப்பது போல் முன்னும் பின்னுமாக மடித்து லேசாக அதனை நீளவாக்கில் இழுத்துக் கொண்டு, ஒரு மூலையில் இருந்து  சுருட்டிக் கொண்டே வந்து அடுத்த மூலையை நடுவில் வைத்து அழுத்தி ஒட்டிவிடவும்.         ● இப்போது சுருட்டி வைத்திருக்கும் மாவை லேசாக திரட்டி தோசைக் கல்லில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.         ● கல்லில் இருந்து  பரோட்டாவ

முட்டை ரோல் (Egg Roll)

Image
தேவையான பொருட்கள்: முட்டை : 5 பச்சை வெங்காயம் : 2 கேரட் :  2 உப்பு : தேவைக்கேற்ப செய்முறை:         ₹ ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.         ₹ பிறகு வெங்காயத் தாள் மற்றும் கேரட்டை பொடிப் பொடியாக நறுக்கி முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.         ₹ ஒரு தாவாவை (Non stick pan) அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றி தவா முழுவதும் படர விடவும்.         ₹ சிறிதுநேரம் கழித்து முட்டையை மெதுவாக மடித்துக் கொண்டு அதனை ஒரு ஓரத்தில் வைத்து மீதமுள்ள இடத்தில் முட்டைக் கலவையை ஊற்றி படர விடவும்.(படத்தில் காட்டியுள்ளபடி)         ₹ மடித்து வைத்துள்ள ஆம்லெட்டுடன் சேர்த்து ஊற்றிய கலவை வெந்ததும் அதனுடன் சேர்த்து மடித்து அதனை தவாவின் ஓரம் வைக்கவும்.         ₹ இதேபோல் முட்டைக் கலவை தீரும் வரை இதே முறையை பின்பற்றவும்.         ₹ இப்போது அடுப்பை அணைத்து விட்டு முட்டை ரோலை ஒரு தட்டில் மாற்றி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான சாஸூடன் பரிமாறவ

செம்பருத்தி பூ டீ (Hibiscus Tea)

Image
        செம்பருத்தி பூ இதயத்திற்கு மிகவும் நல்லது,இதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு.இதனை தினமும் குடித்து வர இதயப் பிரச்சனைகள் நீங்கும்.முடி உதிர்தல் பிரச்சனைகள் குறையும்.உடல் எடையும் வேகமாகக் குறையும். தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ : 2 வெல்லம்/தேன் : 1 தேக்கரண்டி எலுமிச்சை : 1 தண்ணீர் : 200 மிலி செய்முறை:         □ முதலில் செம்பருத்தி பூவின் மகரந்தங்கள் மற்றும் காம்பினை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் எடுத்து நீரில் போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.         □ அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் அல்லது சக்கரை சேர்த்துக் கொள்ளவும்.         □ பிறகு செம்பருத்தி இதழ்களை சேர்க்கவும், லேசான கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி மூடியை போட்டு மூடி விட வேண்டும்.         □ சிறிதுநேரம் கழித்து வடிகட்டியைக் கொண்டு வடிகட்டி ஒரு டம்ளர் டீ-க்கு அரை தேக்கரண்டி எலுமிச்சம் பழம் போதுமானது,அதனை செம்பருத்தி டீ-யுடன் சேர்த்தால் சத்தான செம்பருத்தி டீ தயார். குறிப்பு :         வெல்ல

ஆம்லெட் கிரேவி (Dhaba style omelette curry)

Image
தேவையான பொருட்கள்: முட்டை : 5 வெங்காயம் : 3 தக்காளி : 1 இஞ்சி : சிறிதளவு பூண்டு : சிறிதளவு மிளகாய்த் தூள் : 1 தேக்கரண்டி தனியாத் தூள் : 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் : 1/4 தேக்கரண்டி சீரகத் தூள் : 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் : 1 தேக்கரண்டி எண்ணெய் : 2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப கொத்தமல்லி : சிறிதளவு செய்முறை:         ● முதலில் ஒரு பெரிய வெங்காயம் எடுத்துக் கொண்டு அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.         ● பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.          ● அடுப்பில் தவாவை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலக்கி வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றவும்.         ● 2 நிமிடம் கழித்து ஆம்லெட்டை படத்தில் காட்டியுள்ளபடி மடித்துக் கொள்ளவும்.         ● பின்னர் மடித்து வைத்துள்ள ஆம்லெட்டை தேவையான அளவிற்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.வெட்டிய துண்டுகள் 1 நிமிடத்திற்கு அனலிலே இருக்கட்டும்.         ● இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் 2 தேக்க

மலேசியன் சிக்கன் கிரேவி (Malaysian style chicken curry)

Image
தேவையான பொருட்கள் : சிக்கன் : 750 கிராம் தேங்காய்ப் பால் : 400 மிலி பெரிய வெங்காயம் : 1 (சிறியதாக                                                                நறுக்கியது) பச்சை மிளகாய் : 3 எலுமிச்சை பழம் : அரை நட்சத்திர சோம்பு : 2 மிளகுப் பொடி : 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் : 2 தேக்கரண்டி தனியாத் தூள் : 1 தேக்கரண்டி சீரகத் தூள் : 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி கிராம்பு : 2 பட்டை : சிறிதளவு ஏலக்காய் : 6 கறிவேப்பிலை : சிறிதளவு இஞ்சி/பூண்டு விழுது : 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்:3(அ)4 தேக்கரண்டி செய்முறை:        ○ அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.        ○ எண்ணெய் காய்ந்ததும் பட்டை மற்றும் நட்சத்திர சோம்பை போட்டுக் கொள்ளவும்.         ○ பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.        ○ அதன் பிறகு எடுத்து வைத்துள்ள இஞ்சி/பூண்டு விழுது, கிராம்பு,பட்டை,ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.        ○ பின்னர் மசாலா பொருட்களான மிளக

கம்பு மோர்(Millet Buttermilk)

Image
தேவையான பொருட்கள்: கம்பு மாவு : 2 தேக்கரண்டி மோர் : 1 கப் தண்ணீர்:2 கப் உப்பு : தேவைக்கேற்ப செய்முறை:        ● ஒரு பாத்திரத்தில்  இரண்டு தேக்கரண்டி கம்பு மாவு மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு கட்டிப்படாத அளவிற்கு கரைத்துக் கொள்ளவும்.        ● இக்கலவையானது கட்டியாக(thick) இருக்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் இதனை நாம் 3 நிமிடத்திற்கு சமைக்க போகிறோம்.        ● பிறகு அடுப்பை பற்ற வைத்துவிட்டு சிறிதளவு உப்பு மற்றும் அதனுடன் எடுத்து வைத்துள்ள மோரை ஊற்றி குறைவான சூட்டில் 2 முதலில் 3 நிமிடம் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும் .        ● இவ்வாறு செய்வதால் கலவையானது கட்டிப்பதத்துடன் வருவது மட்டுமில்லாமல் அதனுடைய பச்சை வாசனையும் மறையும்.        ● இக்கலவையானது சிறிது கட்டிப் பதத்திற்கு வந்தால் போதுமானது. மிகவும் கட்டியாகக் கூடாது.        ● இப்போது அடுப்பை அணைத்து விட்டு 3 நொடிக்கு காத்திருக்கவும் சூடு இறங்கியதும் அதனை ஒரு டம்ளரில் மாற்றி பரிமாறலாம்.        ● இதனுடன் சிறிதளவு துருவிய இஞ்சி மற்றும் சிறிதளவு பச்சை மிளகாய் இவற்றை சேர்த்தும் அருந்தலாம் அல்லது நமக்க

கேழ்வரகு பூரி (Raagi Poori)

Image
       இந்தக் கேழ்வரகு பூரி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான உணவு.பேரு காலத்தில் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொண்டால் அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கும். குழந்தைகளும் உண்ணக் கூடிய சுவையான உணவாகும். இதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்  : கேழ்வரகு மாவு : 1 கப் கோதுமை மாவு : 1 கப் நெய் : 2 தேக்கரண்டி உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : பொரிப்பதற்கு செய்முறை :        ● கேழ்வரகு மற்றும் கோதுமை மாவை சம அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது உப்பு மற்றும் நெய்யை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.        ● பிறகு அந்த மாவில் சிறிது சிறிதாக நீர் விட்டு பூரிக்கு மாவு திரட்டுவது போல் திரட்டிக் கொள்ளவும்.        ● திரட்டி வைத்த மாவினை சிறிய உருண்டைகளாகப் பிடித்து அதனை கோதுமை மாவில் பிரட்டி பூரியை உருட்டி எடுத்துக் கொள்ளவும்.        ● இப்போது வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் திரட்டி வைத்த பூரியை போட்டு சிறிது நேரம் கழித்து இன்னொரு புறம் திருப்பி விடவும்.        ● அதன்பின் வாணலில் இருந்து பூரியை எடுத்து அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது உங்களின் வ

சைனீஸ் சிக்கன் நூடுல்ஸ் (Chinese Chicken Noodles)

Image
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் : 150 கிராம் சிக்கன்    : 100கிராம்(எலும்பில்லாதது,                                  சிறிது சிறிதாக வெட்டிக்                                          கொள்ளவும்) குடை மிளகாய் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது) கேரட் : சிறிதளவு (நீளவாக்கில்                                          வெட்டியது) கோஸ் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது ) வெங்காயம் : சிறிதளவு (நீளவாக்கில்                                         வெட்டியது ) இஞ்சி : சிறிதளவு பூண்டு : சிறிதளவு பச்சை மிளகாய் : 1 அல்லது 2 (சிறிதாக                                         வெட்டிக் கொள்ளவும்) தனி மிளகாய் தூள் : 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் : 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் : 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் : 2 தேக்கரண்டி வினிகர் : 1 தேக்கரண்டி கொத்தமல்லி : சிறிதளவு எண்ணெய் : 3 தேக்கரண்டி செய்முறை : ● அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பை சேர்த்து பிறகு அதனுடன் 3 துளி

சிவப்பு கவுனி அரிசி இட்லி (Red Kavuni Rice Idly)

Image
சிவப்பு கவுனி அரிசி செய்யத் தேவையான பொருட்கள்: கவுனி அரிசி: 1 கப் இட்லி அரிசி : 1 கப் உளுத்தம் பருப்பு:1/2 கப் செய்முறை :     ● கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசியை 3 முதல் 4 மணி நேரமும் உளுந்தை 2 மணி நேரமும் ஊற வைத்துக் கொள்ளவும்.     ● இட்லிக்கு மாவு அரைப்பது போல உளுந்தை முதலில் பொங்க அரைத்துக் கொண்டு பின் இட்லி மற்றும் கவுனி அரிசியை அரைத்துக் கொள்வோம்.     ● பிறகு அதற்கு தேவையான உப்பை போட்டு 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவானது நன்கு புளித்து இருக்கும்.     ● சூடான இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.     ● இப்போது மிகவும் சத்தான மிருதுவான சிகப்பு கவுனி இட்லி தயார்.

வேர்க்கடலை உருண்டை(Groundnut Laddu)

Image
        வேர்க்கடலையில் அதிகப்படியான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.எந்த வயதினரும் சாப்பிடக்கூடிய எளிய உணவு..இதனை தினமும் குழந்தைகளுக்கு ஒரு உருண்டை கொடுத்து வர அறிவு வளர்ச்சி அதிகமாகும். தேவையான பொருட்கள்  : வறுத்த வேர்க்கடலை: 1/2 கிலோ வெல்லம் : 1/2 கிலோ (நன்கு தட்டியது) நெய் : 2 தேக்கரண்டி செய்முறை:   ○ வறுத்த வேர்க்கடலையின் தோலை நன்கு புடைத்து நீக்கிக் கொள்ளவும்.   ○ ஒர் மிக்ஸியில் வேர்க்கடலையை கொட்டி அரைத்துக் கொண்டு பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து ஒர் முறை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.   ○ அரைத்த மாவை எடுத்து நமக்கு தேவையான அளவில் நன்கு அழுத்தி உருண்டை பிடித்துக் கொள்ளவும்.   ○  உருண்டை பிடிக்க வரவில்லை எனில் எடுத்து வைத்துள்ள நெய்யை உருக்கி அந்த மாவில் நன்கு கலந்து கொண்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு இப்போது உருண்டை பிடிக்கவும்.       குறிப்பு :  வேர்க்கடலை நல்ல எண்ணெய் தன்மை உடையதாகவும் வெல்லம் பாகுத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் வேர்க்கடலை உருண்டை ருசியாக இருக்கும்.